India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை 27 பேர் குழு தயாரித்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் செயல்பட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மற்றொரு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். நாட்டு மக்கள் கருத்துகளை கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டு பழங்குடியின பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1000 வந்து சேர்ந்துவிடும். சரியான பயனாளிகளுக்கு ரூ.1000 செல்கிறதா என்பதை அறிய, தற்போது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தப்படுகிறது . அதே நேரம் தேர்தல் காரணமாக மேல்முறையீடு செய்த மகளிருக்கு இம்மாதம் ரூ.1000 வழங்கப்படாது. அவர்களுக்கு அடுத்த மாதம் வழங்கப்படும்.
அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக எப்போதும் சமூக நீதிக்காகப் போராடுவதாக தெரிவித்தார். 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
IPLஇல் இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுவேந்திர சாஹல் 11 விக்கெட்டுகளுடன் (6 போட்டி) முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 10 விக்கெட்டுகளுடன் (5 போட்டி) 2ஆவது இடத்திலும், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 9 விக்கெட்டுகளுடன் (4 போட்டி) 3வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் வானதி நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் ஜூன் 5ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இது பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி பெற்று, எம்பியாக தேர்வு செய்யப்பட்டால், வானதி தலைவராக இருப்பார் என்பது வெறும் யூகம் மட்டுமே. தற்போதைக்கு இதை நம்ப வேண்டாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஏலத்தில் ₹24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். சிறப்பாக பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 4 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர், 4 போட்டிகளிலும் சேர்த்து 154 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக, இந்தியாவைக் காப்பாற்றப் போவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் 2026ல் ஏற்படவிருக்கும் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கும் என்று கூறினார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விளம்பர அரசியல் நடத்தும் திமுகவை அரசியலை விட்டு அப்புறப்படுத்தும் தேர்தல் என்றும் அவர் கூறினார்.
சமூக நீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்ட தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் எனக் கூறியுள்ளார்.
அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2021இல் பாஜக உடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இன்று அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும். ஆட்சி அமையாமல் போனதற்கு பாஜக தான் காரணம். அதிமுக குறித்து பேச அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் கிடையாது என விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.