India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுமைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார். வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், வந்தே பாரத் இருக்கை ரயில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் என 3 வகை ரயில்களை இயக்க பாஜக நடவடிக்கை எடுக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.
7 துறைகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்பதை மத்திய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்ட புள்ளிகளின் மூலம் முதலமைச்சரின் சாதனைகள் நிரூபணமாகியுள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகவும் பின்தங்கி தங்கி இருந்தது. தற்போது ஜவுளித் துணி, ஆயத்த ஆடைகள், தோல் பொருள் ஏற்றுமதிகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவரில் எறியப்படும் பந்து, அதே வேகத்தில் திரும்பி வரும். அதேபோல் நன்மை, தீமைகளும் நமக்கே திரும்பும். நன்மை செய்யும்பட்சத்தில், நட்புவட்டம் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். பிரச்னைகளின்போது தோள்கொடுக்க கூட்டமே திரளும். தீமை செய்யும்பட்சத்தில், பிரச்னை நமக்கே திரும்பும். அதை எதிர்கொள்ள முடியாததோடு, தோள்கொடுத்து உதவ யாரும் வர மாட்டார்கள். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவோம்.
IPLஇல் இதுவரை நடந்த போட்டிகளில் குவித்த ரன்கள் அடிப்படையில் பேட்ஸ்மேன்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ஆர்சிபி வீரர் கோலி 319 ரன்கள் (6 போட்டிகள்) குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 284 ரன்களுடன் (6 போட்டிகள்) 2ஆவது இடத்திலும், இன்னொரு ராஜஸ்தான் வீரர் சாம்சன் 264 ரன்களுடன் (6 போட்டிகள்) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் கௌரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும் என்றும் தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறினார். மேலும், திருநங்கைகளையும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் வாழும் ஏழைகளுக்கு தற்போதுதான் உரிமைகள் கிடைக்கிறது என்றும், அதேநேரத்தில் ஏழைகளின் சொத்துகளை கொள்ளையடித்தோர் சிறைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடரும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹820க்கு விற்பனையாகிறது. அதேநேரம் உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கு ₹300 மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டர் ₹520க்கு கிடைக்கிறது.
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், தமிழ் கலாசாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும், வரும் ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, அமைதி காக்கும்படி இஸ்ரேல், ஈரானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல், ஈரான் மோதல் போக்கால், மத்திய கிழக்கு அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகி இருப்பதை கண்டு கவலை அடைந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், பதற்றத்தைத் தணித்து அமைதி காக்கவும், வன்முறை பாதையிலிருந்து விலகி ராஜ்ஜீய பாதைக்கு திரும்பும்படியும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சாலையோரம் வசிப்பவர்களுக்கு குறைந்த வாடகையில் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டுவரப்படும், கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார். மேலும், நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.