news

News April 13, 2024

நாளை காலை 8:30 மணிக்கு பாஜக தேர்தல் அறிக்கை

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அரசு தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

News April 13, 2024

தர்மபுரியில் திமுக வெல்வது அவ்வளவு எளிதல்ல

image

தர்மபுரியில் திமுக வெல்வது அவ்வளவு எளிதல்ல என திமுக எம்.பி செந்தில்குமார் ஆருடம் தெரிவித்துள்ளார். தனியார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தலில் ஒருவேளை வன்னியர் சமூகத்தின் 80% வாக்குகளை பாமக பெறும்பட்சத்தில் பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் வாக்குகளை திமுக முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், அதிமுக தனி அணியாக நிற்கும் போது இது சாத்தியமாகுமா என தெரியவில்லை” என்றார்.

News April 13, 2024

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <>https://ssc.gov.in/home/apply<<>> என்ற இணையதளத்தின் மூலம் மே 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News April 13, 2024

மோடி ஏன் பதற்றமடைகிறார்?

image

மோடி ஏன் பதற்றமடைகிறார் என காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி மீண்டும் மீண்டும் ராஜஸ்தான் வருவதாக தெரிவித்த அவர், 400 தொகுதிகளை வெல்வோம் எனக் கூறிவிட்டு பதற்றம் ஏன் என்றார். மக்களை பிளவுபடுத்துகிறார்கள், தன்னாட்சி அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களை பாஜகவில் இணைக்கிறார்கள். 400 தொகுதிகளை வெல்ல வேறென்ன வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

News April 13, 2024

இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டி?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், விஜய்யின் தவெக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. MLA புகழேந்தி சமீபத்தில் காலமானதால், அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த விஜய், இடைத்தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமே இந்த ஏற்பாடு என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

News April 13, 2024

IPL: 147 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப்

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 147/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த PBKS அணியில் ஜிதேஷ் ஷர்மா 29, அஷுதோஷ் ஷர்மா 31 ரன்கள் அடித்தனர். RR தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் 2, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து RR அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

முதலீட்டாளர்களே கவனமாக இருங்கள்

image

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டிற்கான முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த வாரம் மொத்தம் 63 நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அலோக் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகிறது. முடிவுகளை பொருத்து அந்நிறுவன பங்குகளின் விலையில் தாக்கம் ஏற்படலாம்.

News April 13, 2024

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் வடமாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், அடுத்த 1 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருச்சி, நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 13, 2024

ராம் சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

image

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 14ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பொழுதுபோக்கு துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் பலர் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

News April 13, 2024

ராகுகாலம் பார்க்காமல் வேட்புமனு செய்தது உண்டா?

image

ராகு காலம் பார்க்காமல் எந்தவொரு திமுக வேட்பாளராவது வேட்புமனு தாக்கல் செய்தது உண்டா? என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த தமிழிசை, இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?, தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனவும் கடுமையான சாடியுள்ளார்.

error: Content is protected !!