news

News April 13, 2024

ராகுலின் வருகையினால் மோடியின் தூக்கம் காலி

image

ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகை பிரதமர் மோடியின் மொத்த பிரசாரத்தையும் காலி செய்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படத்தைப்போல பிரமாண்டமாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றார்.

News April 13, 2024

ரூ.1000 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

image

தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட தங்க கட்டிகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,000 கோடிக்கும் மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 13, 2024

தனிநபர் வங்கிக் கடன் வட்டி விகிதங்கள்

image

அவசரத் தேவைக்காக பெறப்படும் தனிநபர் வங்கிக் கடன் மற்றும் அதன் வட்டி விவரம்
*SBI-11.15%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,532) (தவணை காலம் 4 ஆண்டுகள்)
*ICICI-10.8%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,575)
*ஆக்ஸிஸ்-10.75%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,572)
*YES BANK-10.99%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,584)
*PNB-12.4%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,653)
*UBOI-11.75%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,621)
*BOB-11.4%-(₹1 லட்சத்திற்கு EMI ₹2,604)

News April 13, 2024

ரயிலின் பெயர் பலகையால் சர்ச்சை

image

ஹதியா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பலகையில் ‘ஹதியா’ என்ற பெயருக்கு பதிலாக மலையாளத்தில் ‘கொலைக்காரன்’ என மொழிப்பெயர்ப்பு செய்து எழுதப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இந்தப் புகைப்படம் வைரலான நிலையில், கொலைக்காரன் என குறிப்பிடும் வார்த்தையை ரயில்வே ஊழியர்கள் அழித்துள்ளனர். கூகுள் மொழிப்பெயர்ப்பை பயன்படுத்தி எழுதினால் இப்படிதான் பிரச்னை வரும் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

News April 13, 2024

SBI கஸ்டமர்ஸ் செல்போன் எண்ணை ஈஸியாக மாற்றலாம்

image

வாடிக்கையாளர்களுக்காக SBI பல வசதிகளை செய்கிறது. அந்த வகையில், வங்கிக் கணக்குடன் இணைத்துள்ள செல்போன் எண்ணை மாற்றும் வழி சுலபமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், ATM இயந்திரத்தில், தங்களது டெபிட் கார்டை செலுத்தி Registration என்ற கமெண்டை கிளிக் செய்தால் Mobile Number Registration என்ற ஆப்ஷன் வரும். அதில் Change Mobile Number என்ற ஆப்ஷன் மூலம் பழைய எண்ணுக்கு பதில் புதிய செல்போன் எண்ணை மாற்றலாம்.

News April 13, 2024

ஈரான் பிடியில் சிக்கிய 17 இந்தியர்களின் கதி என்ன?

image

ஹோர்முஸ் கடற்பகுதியில் ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் தொடர்புடைய சரக்குக் கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 பேர் சிக்கியுள்ளனர். கண்டெய்னர் நிறுவனமான MSC வெளியிட்ட அறிக்கையில், ஹெலிகாப்டர் மூலம் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஈரான் கடற்பகுதியை நோக்கி கொண்டுச் செல்லப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, 17 இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஈரானுடன் இந்தியா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 13, 2024

மும்பையில் குடியேறிய பூஜா ஹெக்டே

image

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான அவர், ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், அவர் மும்பையில் 4,000 சதுர அடியில் புதிய வீடு வாங்கி குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்கரையை பார்த்தபடி கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பின் மதிப்பு ₹45 கோடி எனக் கூறப்படுகிறது.

News April 13, 2024

ராபர்டோ கவாலி வடிவமைத்த ஆடைகள் வைரல்

image

இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ராபர்டோ கவாலி 83ஆவது வயதில் நேற்று காலமானார். இந்நிலையில், அவரது ஆடை வடிவமைப்புகள் தற்போது வைரலாகின்றன. இதில் 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை முதலிடம் பிடித்துள்ளது. 2019 கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை 2ஆவது இடமும், 2007 கிராமி விருது விழாவில் அமெரிக்க பாடகி பியோன்ஸ் அணிந்து வந்த ஆடை 3ஆவது இடம் பிடித்துள்ளன.

News April 13, 2024

IPL: பஞ்சாப் அணி பேட்டிங்

image

சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RR கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து PBKS அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் RR முதல் இடத்திலும், 2 வெற்றி, 3 தோல்வியுடன் PBKS 8ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 13, 2024

இஸ்ரேல் சரக்குக் கப்பலை சிறைப்பிடித்தது ஈரான்!

image

இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சரக்குக் கப்பலை ஹோர்முஸ் கடற்பகுதியில் ஈரான் கடற்படை அதிரடியாக சிறைப்பிடித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை, ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் மடக்கி சிறைப்பிடித்துள்ளது.

error: Content is protected !!