news

News May 1, 2024

தமிழகத்தில் வெப்பநிலை 5°C வரை உயரும்

image

தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு 2 முதல் 4°C வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-42°C-ஐ ஒட்டி இருக்கக்கூடும் என்றும், மே 4, 5ஆம் தேதிகளில் வெப்பநிலை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40°C ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்

image

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பணத் தேவைக்காக பகுதிநேர வேலை செய்கின்றனர். அவர்கள் இனி வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் 24 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால், வேலை செய்யும் நோக்கத்தோடு கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் கூறி அரசு இந்த விதியை அரசு மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

News May 1, 2024

இரண்டாக பிரிகிறது கோத்ரெஜ் குழுமம்

image

127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரெஜ் குழுமம், 2ஆக பிரியவுள்ளது. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் ஆகியோரும், கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தை ஜம்ஷித் கோத்ரெஜ், ஸ்மிதா ஆகியோரும் நிர்வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருட பங்கு உரிமைப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. செபி ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான மற்ற பணிகள் தொடங்கும்.

News May 1, 2024

50 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன்

image

குஜராத் மாநிலம் அல்தான் பகுதியில் 50 மாணவர்களுடன் பயணித்த தனியார் பள்ளிப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பேருந்தில் இருந்த 1 – 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயத்தில் அலறிய நிலையில், சிலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஓட்டுநர் மதுபோதையில் இருப்பது அறிந்ததை அடுத்து, 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஓட்டுநரை வலுக்கட்டாயமாகப் பேருந்தை நிறுத்தச் செய்து மாணவர்களைக் காப்பாற்றினார்.

News May 1, 2024

வன்கொடுமை குற்றவாளிக்கு மோடி பாதுகாப்பு அளிக்கிறார்

image

கர்நாடக பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள JDS கட்சியின் வேட்பாளர் பிரஜ்வால் நாட்டை விட்டு எப்படி வெளியேறினார் என கேள்வி எழுப்பிய ராகுல், எல்லாம் தெரிந்திருந்தும் வாக்குக்காக கைசர்கஞ்ச் முதல் கர்நாடகா வரையில் உள்ள, வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மோடி பாதுகாப்பு அளிக்கிறார் எனச் சாடினார்

News May 1, 2024

தமிழகப் பயணிக்கு கர்நாடகா அரசு ₹1 லட்சம் இழப்பீடு

image

கடந்த ஆண்டு கர்நாடக அரசுப் பேருந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி பெங்களூருவுக்கு பயணித்தார். அப்போது, அவர் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்க்கு ₹200 லக்கேஜ் கட்டணம் செலுத்தும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அவர் ₹50 தர முன்வந்ததால், பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

News May 1, 2024

பாஜக வென்றால் மோடி பிரதமராகக் கூடாது

image

மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடி அல்லாத வேறு ஒருவர் அந்த பதவிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அவர், மோடி ஆட்சியில் இந்தியாவில் எந்தவொரு துறையும் வளர்ச்சி அடையவில்லை என்றார். மேலும் பேசிய அவர், பிரதமரின் பொறுப்பற்ற ஆட்சியால், இந்தியாவுடன் நட்பாக இருந்த நாடுகள் கூட, தற்போது எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

News May 1, 2024

விருதுநகர் கல்குவாரி உரிமையாளர் கைது

image

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில், மேலும் சிலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, குவாரியின் உரிமையாளர் தலைமறைவான நிலையில், தீவிர தேடுதலுக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர்.

News May 1, 2024

70,772 கிலோ ஹெராயினை காணவில்லையா?

image

70,772 கிலோ ஹெராயின் காணாமல் போனது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 – 2020 வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் காணாமல் போன விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் வழக்குத் தொடுத்திருந்தார். காணாமல் போன 70,772 கிலோ ஹெராயினின் மதிப்பு ₹5 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் கையாளக்கூடாது

image

பிரதமர் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே தவிர, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “வாக்கு வங்கிக்காக மத அரசியல் செய்யும் பிரதமரைக் கண்டிக்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை அது வெறுப்புப் பேச்சு. அவசியப்படும் இடங்களில் பாஜகவை வன்மையாகக் கண்டிப்போம்” என்றார்.

error: Content is protected !!