news

News April 13, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும், நெருக்கமான உறவும் அறிவார்ந்த மனிதனுக்கு வேறு இல்லை.
➤ நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
➤சில வேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
➤கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.

News April 13, 2024

நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய ஆம் ஆத்மி

image

உ.பி-யில் INDIA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்றவும், எதேச்சதிகார அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய அவர், தங்களின் ஆதரவை அவரிடம் தெரிவித்தார். உபி-யில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

News April 13, 2024

நம்பிக்கை துரோகத்திற்கு சிறந்த உதாரணம் இபிஎஸ்

image

நம்பிக்கை துரோகத்திற்கு மிக சிறந்த உதாரணம் இபிஎஸ் என முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தெரிவித்துள்ளார். அரசியலில் அவரை வளர்த்துவிட்ட யாரையும் இபிஎஸ் அதிமுகவில் வைத்துக்கொண்டதே கிடையாது. இதற்கு மிக சமீபத்திய உதாரணம் சசிகலா. குறுக்கு வழியில் மட்டுமே அதிமுகவில் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், தான் அதிமுகவை விட்டு வெளியேறுவதற்கு இபிஎஸ் தான் முக்கிய காரணம் என்றார்.

News April 13, 2024

வரலாற்றில் இன்று

image

➤1919 – ஜலியான்வாலா பாக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலி
➤1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
➤1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
➤1976 – பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

News April 13, 2024

பற்களை கவனிக்க மறந்து விடாதீர்கள்

image

பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள். பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சில சமயம் பெரிய பாதிப்பை கூட எற்படுத்தும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

News April 13, 2024

நெருக்கடியில் பெங்களூரு அணி

image

லக்னோ அணியுடனான நேற்றைய போட்டியில் டெல்லி அணி வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதைப் போலவே 9ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. இதன் மூலம் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

News April 13, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம் : கடவுள் வாழ்த்து
◾குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல்
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
◾விளக்கம்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

News April 13, 2024

கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தொலைவிலுள்ள பொருளை, 20 விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். மின்னணு திரைகளின் வெளிச்சத்தை முடிந்த அளவு குறைத்து வைக்கலாம். நள்ளிரவு கடந்து கம்யூட்டரில் வேலை செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

News April 13, 2024

தயவு செய்து அண்ணனுக்கு ஓட்டு போடுங்க…

image

அண்ணனை (விஜய பிரபாகரன்) வெற்றிபெற வைத்தால் அப்பாவின் (விஜயகாந்த்) ஆத்மா சாந்தியடையும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ” இந்த தொகுதியில் அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என சிலர் வருத்தப்பட்டனர். அதற்கு பதிலாக என் அண்ணனை வெற்றிபெற செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.

News April 13, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!