news

News April 12, 2024

BREAKING: 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

image

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும், பிற பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

News April 12, 2024

தேர்தல் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை மீது வழக்கு

image

தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரின்பேரில் தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தில் இரவு 10 மணிக்கு மேல் பாஜகவினர் பரப்புரை செய்ததாக திமுக சார்பில் வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 12, 2024

உதயநிதி ஸ்டாலினிடம் கை கட்டி நிற்கும் கமல்

image

உதயநிதி ஸ்டாலினிடம் கை கட்டி கொண்டு கமல் நிற்பதாக அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும் நடிகையுமான விந்தியா விமர்சித்துள்ளார். சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தமிழகத்தில் தாமரையும் மலரக்கூடாது, திமுக கூட்டணியும் வளரக்கூடாது என்றார். திமுகவை எதிர்த்து கட்சித் தொடங்கிய கமல்ஹாசன் தற்போது உதயநிதி முன்பு கைகட்டி கொண்டு நிற்பதாகவும் அவர் விமர்சித்தார்.

News April 12, 2024

தங்கம் விலை உயர்வால் என்னென்ன பாதிப்பு?

image

தங்கம் விலை அதிகரிப்பது, இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். *நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க வழிவகுக்கும் * இந்திய வர்த்தக சமநிலையை பாதிக்கும் *தங்க நகைக்கடன் துறையை பாதிக்கும். ஏற்கனவே கடன் வாங்கியோர் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் *நகைத் தயாரிப்பு தொழில்துறையில் செலவினத்தை அதிகரித்து, லாபம் குறைய வழிவகுக்கும் *இந்திய பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.

News April 12, 2024

டெல்லியில் அரசை கவிழ்க்க சதி?

image

ஆம் ஆத்மி அரசை கவிழ்த்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதி நடப்பதாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி மர்லினா குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அரசை கலைப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லி மக்கள் வழங்கிய அதிகாரத்தை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பாசிச சக்திகள் பறிக்கத் துடிக்கின்றன எனக் கூறினார்.

News April 12, 2024

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து

image

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென மோடி அறிவித்துள்ளார். உதம்பூர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் இதுவரை நடந்ததெல்லாம் வெறும் டிரைலர்தான் என்றும், ஜம்மு-காஷ்மீருக்காக தாம் புதிய, அழகிய சித்திரத்தை வரைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெகு காலம் இல்லை என்றும் தெரிவித்தார்.

News April 12, 2024

29,000% உயர்ந்த தனியார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு

image

தனியார் நிறுவனம் ஒன்றின் பங்கு மதிப்பு 3 ஆண்டுகளில் 29,287% அதிகரித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இயாந்திரா வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு, 2021 மார்ச்சில் ₹3.28ஆக இருந்தது. அது தற்போது ₹963.90ஆக அதிகரித்துள்ளது. அதாவது 3 ஆண்டுகளில் 29,287% உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனம், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது.

News April 12, 2024

ரஜினிக்கு தூண்டில் வீசும் பாஜக

image

நடிகர் ரஜினியின் ஆதரவை பெறும் முயற்சியில் பாஜக தேசியத் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலில் ஆதரவு தெரிவிக்க அவர் தயங்கினால், மோடியின் பத்தாண்டு கால சாதனைகளை பாராட்டி சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டால் கூட போதும் என பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக போடும் தூண்டிலில் ரஜினி சிக்குவாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

News April 12, 2024

கனடா கிரிக்கெட் அணியில் விளையாட விரும்பிய பும்ரா

image

இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் முன்பு, கனடா சென்று அந்நாட்டு அணிக்காக பும்ரா விளையாட விரும்பியதாக அவரது மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, பும்ரா கனடா சென்று, அந்நாட்டு தேசிய அணிக்கு கிரிக்கெட் விளையாட விரும்பியதாகவும், ஆனால் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, பிறகு இந்திய அணியில் தேர்வாகி விளையாட ஆரம்பித்ததால், அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

News April 12, 2024

அடுத்தடுத்து வெளியாகும் பெரிய திரைப்படங்கள்

image

▶ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியா 2’ – ஜூன் ▶அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ – ஆகஸ்ட் ▶வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ – செப்டம்பர் ▶ரஜினி நடிக்கும் வேட்டையன் – அக்டோபர் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும், அமரன், தங்கலான், விடாமுயற்சி, கங்குவா உள்ளிட்ட படங்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!