news

News May 1, 2024

55% வாரிசு சொத்துரிமை வரி விதிக்க காங்., திட்டம்

image

55% வாரிசு சொத்துரிமை வரி விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமா் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொள்கை முடக்கத்தால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பொய் வாக்குறுதிகள், வாக்கு வங்கி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் ஆகியவை தான் காங்கிரஸின் அடையாளங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

நடிகர் நாசர் பெயரில் பண மோசடி

image

நடிகர் நாசர் பெயரில் போலி பேஸ்புக், X தளப் பக்கங்களை தொடங்கி, மோசடி செய்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இதுதொடர்பான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் பார்வையில் நடிகர் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த மர்ம நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

ஒற்றை ஆளாக போராடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ்

image

மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 7 Four, 2 Six என விளாசி தனது 9ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்த அவர், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இது லக்னோ அணிக்கு கிடைக்கும் 6ஆவது வெற்றியாகும்.

News May 1, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 132
▶குறள்: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
▶பொருள்: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை. அதனை, எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் காக்க வேண்டும்.

News May 1, 2024

நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை

image

நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால், தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, “மன்னித்து விடுங்கள் அப்பா. இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது” என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

News May 1, 2024

செந்தில் பாலாஜியின் காவல் 36ஆவது முறையாக நீட்டிப்பு

image

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், 36ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்தவாறு காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

News May 1, 2024

‘மங்காத்தா’ படத்தை இலவசமாக காணலாம்

image

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் மே 5ஆம் தேதி வரை ‘மங்காத்தா’ திரைப்படத்தை சன் எக்ஸ் டி OTT தளத்தில் இலவசமாக காணாமல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அஜித் நடித்த தீனா, பில்லா ஆகியத் திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளன. 53ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்துக்கு, சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

News May 1, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News May 1, 2024

இந்திய மகளிர் அணி வெற்றி

image

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது மகளிர் டி20 போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 6ஆவது ஓவரின் போது (இந்தியா- 47/1 ரன்கள்) மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து DLS முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

News May 1, 2024

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம்?

image

▶நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்கள், பழ வகைகளை சாப்பிட வேண்டும். ▶மோர், தயிர், தர்ப்பூசணி, இளநீர், பழச்சாறுகள் குடிக்கலாம். ▶சிறுவர்களுக்கு மோர், பழச்சாறு, பழங்களை கொடுக்கலாம். ▶பழைய சாதத்தை மோரில் கரைத்து கொடுக்கலாம். ▶கம்பங்கூழ், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடலாம். ▶வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் மோர், எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து குடிக்கலாம். ▶குறிப்பாக, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

error: Content is protected !!