India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்கள், பழ வகைகளை சாப்பிட வேண்டும். ▶மோர், தயிர், தர்ப்பூசணி, இளநீர், பழச்சாறுகள் குடிக்கலாம். ▶சிறுவர்களுக்கு மோர், பழச்சாறு, பழங்களை கொடுக்கலாம். ▶பழைய சாதத்தை மோரில் கரைத்து கொடுக்கலாம். ▶கம்பங்கூழ், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடலாம். ▶வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் மோர், எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து குடிக்கலாம். ▶குறிப்பாக, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், விபத்தில் சிக்கிய அனைவருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று (மே 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி
▶போலி வீடியோக்களை உருவாக்குவதில் பாஜக கில்லாடி: மல்லிகார்ஜுன கார்கே
▶பாலியல் விவகாரத்தில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
▶தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
▶100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
▶டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது
தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லு செய்வதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையத்தின் செயல்கள்
உருவாக்குகிறது என்று சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 10 நாள்கள் கடந்து விட்டதாகக் கூறிய அவர், இருப்பினும் இறுதி நிலவர வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உடல் வெப்பம் அதிகமாகும் போது வெளியேறும் வியர்வை, வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக் கொள்வதால் வியர்க்குரு ஏற்படுகிறது. இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு வியர்க்குரு ஏற்பட வாய்ப்பு அதிகம். வியர்க்குருவால் அவதிப்படுவோர் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும்.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதிரடியாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், 12 புள்ளிகளுடன் 3ஆவது முன்னேறியது லக்னோ அணி.
1917 புரட்சி மூலம் ரஷ்யாவில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. பிறகு ரஷ்யா தலைமையில் உருவான சோவியத் யூனியன் மூலம் கம்யூனிஸ்ட் கொள்கை பரப்பப்பட்டு, புதிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசு மலர்ந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு, ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும், சீனா, வடகொரியா, கியூபா, வியட்நாம், வெனிசுலா, லாவோசில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு யார் பொறுப்பேற்பது? என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மவுலானா பசுலுர் ரகுமான் வினவியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர், ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரே நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகக் கனவு காண்கிறது. ஆனால் நாம் நாடு திவாலாவதைத் தவிர்க்க நிதியுதவி கேட்டு வருகிறோம்’ எனச் சோகத்துடன் பேசியுள்ளார்.
ஜோதிட பஞ்சாங்கத்தின்படி நாளை குரு பெயர்ச்சி நடக்கிறது. இதனால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு குபேர ராஜயோகம் காத்திருக்கிறது. குறிப்பாக, மேஷ ராசியினருக்கு வீடு, வாகனம், வேலை என செல்வம் வந்து சேரும். கடக ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த கண்டங்கள் விலகி ஓடும். சிம்ம ராசியினர் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்க உள்ளனர். கன்னி ராசியினருக்கு நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சி பொங்கும்.
Sorry, no posts matched your criteria.