India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய இரு வழித்தடங்களில் வந்தே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. வந்தே மெட்ரோ ரயிலானது, குறுகிய கால அவகாசத்தில் அதிக ரயில் நிறுத்தங்களில் நிறுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடிகை மாளவிகா மோகனன் தனது X பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, கவர்ச்சி உடையில் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, கிளாமர் பிடிக்கும் என்பதால் அந்த மாதிரியான உடை அணிவதாகத் தெரிவித்தார். திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு, அதைப் பார்க்க ஏன் இவ்வளவு அவசரம் என அவர் கேள்வி எழுப்பினார். 30 வயதான அவர், தமிழ், தெலுங்கு உள்பட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
பசுமைச் சூழ்ந்த கோவையின் அடையாளங்களில் ஒன்றான பொள்ளாச்சி – ஆனைமலை சாலை மிகவும் பிரபலமானது. இந்நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக அங்குள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணிகளால் கோவையில் வெயில் 2-3 டிகிரி அதிகரித்துள்ள சூழலில், மரங்களை அகற்றுவது தேவைதானா? என சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் 5 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதன்படி, தக்கலையில் (குமரி) 5 செ.மீ, சுருளகோடு, கோழிப்போர்விளை மாஞ்சோலையில் (நெல்லை) தலா 3 செ.மீ வரையும் மழை கொட்டியது. குழித்துறை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 செ.மீ வரையும் மழை பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை வெயிலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீர், மோர் பந்தல் அமைக்க காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் விதிகள் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்கட்டமாக சென்னையில் 2 இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மக்கள் சேவையில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சீனாவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்-1’ தொடரில் ஜோதி, 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். இதன் காரணமாக, மகளிர் காம்பவுண்ட் பிரிவு தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி, 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே போல இந்திய அளவில் ‘நம்பர்-1’ இடத்தில் அவர் நீடிக்கிறார்.
வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்போரும், வாங்குவோரும், இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் எனத் தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை, ‘பரிவேஷ் 2.0’ இணையதளத்தில் பதிவு செய்து, உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து, விவரங்களை இணையத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் நிரப்பப்படவுள்ள 4,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Sea Man, Deck Rating, & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: ₹55,000/-. கூடுதல் தகவல்களுக்கு https://admission.sealanemaritime.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்க்கவும்.
பிரான்ஸ் பேட்ச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், பிரான்ஸின் மெல்விலுடன் மோதினார். 35 நிமிடங்கள் நீடித்த போட்டியில், 3-0 என்ற செட் கணக்கில் வென்ற வேலவன், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது அவரது 8ஆவது சர்வதேச பட்டமாகும்.
RR அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அஸ்வினின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரர் சேவாக் கவலை தெரிவித்துள்ளார். விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டுமென முனைப்புடன் அஷ்வின் பந்து வீசுவதில்லை என்று கூறிய சேவாக், அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.