News April 30, 2024
சர்வதேச தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்த ஜோதி

உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சீனாவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்-1’ தொடரில் ஜோதி, 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். இதன் காரணமாக, மகளிர் காம்பவுண்ட் பிரிவு தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி, 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே போல இந்திய அளவில் ‘நம்பர்-1’ இடத்தில் அவர் நீடிக்கிறார்.
Similar News
News December 5, 2025
கோவையில் பாலியல் தொழில்: 4 பேர் கைது

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக பந்தய சாலை காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்கவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிவேதா, ஜீனத் பேகம், லீனா, நசீர் உசேன் ஆகியோர்களை கைது செய்தனர்.
News December 5, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம், நாளை (டிசம்பர் 6) வாரியங்காவல் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News December 5, 2025
Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி


