India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழுதடைந்த அரசுப் பேருந்துகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்வதாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் திருச்சியில், அரசுப் பேருந்தின் இருக்கை கழன்று வெளியே விழுந்ததில் நடத்துனர் படுகாயமடைந்தார். இதையடுத்து, பேருந்துகளை சரிசெய்ய ஆணையிடப்பட்ட நிலையில், இதுவரை 13,529 பேருந்துகளை சரிசெய்ததாகவும், எஞ்சியுள்ள பேருந்துகள் மே 6-க்குள் சீர்செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவரில் மிக குறைவான ரன் எடுத்து மோசமான சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணி படைத்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக இன்று களமிறங்கிய அந்த அணி, முதல் 6 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாத குஜராத், 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார் தேவகவுடா வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். ரேவண்ணாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களில், வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
2024 ஐபிஎல் சீசனில் முதல் முறையாக பெங்களூரு அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளது. RCB வீரர் வைஷாக் வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் சுதார் அவுட்டாக, 2ஆவது பந்தில் மோஹித் ஷர்மா ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட்டானார். 3ஆவது பந்தை எதிர்கொண்ட GT வீரர் சங்கர், முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன்மூலம், 20ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் GT அணி 3 விக்கெட்டை இழந்ததுடன் ஆல்அவுட்டானது.
பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை, மாமன்னன் திரைப்படங்களைத் தொடர்ந்து துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை வைத்து புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து வருகிற 6ஆம் தேதி அறிவிக்கப்படுமென படக்குழு கூறியுள்ளது.
ஆர்சிபிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் குஜராத் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் திணறிய அந்த அணி, கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடியது. ஷாருக்கான் 37, டேவிட் மில்லர் 30, ராகுல் தெவாட்டியா 35 ரன்களை அதிரடியாக விளாசினர். இறுதியில், 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து குஜராத் அணி 147 ரன்களை சேர்த்தது.
காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கில், குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நெல்லை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார் கடிதம் தன்னிடம் அளிக்கப்படவில்லை என்றார். மேலும், இந்த கொலையில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்தார். 2 நாள்களுக்கு முன்பு காணாமல் போன ஜெயக்குமார், இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என்.கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெற்கு ரயில்வேயின் (SRMU) முன்னாள் பொதுச் செயலாளரான கண்ணையா, 5ஆவது முறையாக AIRF தலைவராக தேர்வாகியுள்ளார். அது மட்டுமின்றி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான HMS தேசிய செயலாளராகவும் என்.கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். AIRF அமைப்பு 45 லட்சம் ஊழியர்களின் பிரதிநிதியாக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சரை விளாசினார். 16ஆவது ஓவரை கார்ன் சர்மா வீசினார். அப்போது முதலாவது பந்தில் ஒரு பவுண்டரியும், 2ஆவது பந்தில் ஒரு சிக்சரையும் தெவாட்டியா விளாசினார். இதையடுத்து வீசிய 2 பந்துகளையும் தெவாட்டியா பவுண்டரியை நோக்கி அடித்தார். 16 ஓவர் முடிவில், GT அணி 130/5 ரன்கள் எடுத்துள்ளது.
ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளது. 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள அக்கட்சி, கெஜ்ரிவால் பெயரை முதலாவதாக பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், மணிஷ் சிசோடியாவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில், கெஜ்ரிவால், சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.