News May 4, 2024

மாரி செல்வராஜின் 5ஆவது படம் குறித்து புது அப்டேட்

image

பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை, மாமன்னன் திரைப்படங்களைத் தொடர்ந்து துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை வைத்து புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து வருகிற 6ஆம் தேதி அறிவிக்கப்படுமென படக்குழு கூறியுள்ளது.

Similar News

News November 19, 2025

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊதியம் உயர்வு

image

தமிழகத்தில் SIR பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், BLO-க்களுக்கான ஊதியத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ₹1,000-லிருந்து ₹2,000-ஆகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஊதியம் ₹6,000-லிருந்து ₹12,000-ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ₹12,000-லிருந்து ₹18,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News November 19, 2025

விஜய்க்கு ஆதரவாக பேசிய A.C.சண்முகம்

image

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் விஜய்க்கு ஆதரவாக புதிய நீதி கட்சித் தலைவர் A.C.சண்முகம் பேசத் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 வாக்குகள் வரை விஜய் பெறுவார். தவெகவில் இருந்து வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வெற்றிபெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News November 19, 2025

இருமல் மருந்துகளை இனி ஈஸியாக விற்க முடியாது

image

ம.பி.யில் இருமல் சிரப் குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருமல் மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டாக்டரின் பரிந்துரை சீட்டு, மருந்து விற்பனைக்கான உரிமை இருந்தால் மட்டுமே இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

error: Content is protected !!