news

News May 5, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶மே – 5, சித்திரை – 22 ▶கிழமை – ஞாயிறு ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM, 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை நேரம்: 3:00 PM – 4:30 PM ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: துவாதசி

News May 5, 2024

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்

image

தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்க எச்சரித்துள்ளது.

News May 5, 2024

புதிய சாதனை படைத்தார் டு ப்ளெசிஸ்

image

டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த 14ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஆர்சிபி கேப்டன் டு ப்ளெசிஸ். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் எடுத்த அவர் இந்த பெருமையைப் பெற்றுள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (14,562) உள்ளார். அதைத் தொடர்ந்து மாலிக் (13,360), பொல்லார்ட் (12,900), கோலி (14,536), அலெக்ஸ் ஹேல்ஸ் (12,319), வார்னர் (14,232), ரோஹித் (11,482) ஆகியோர் உள்ளனர்.

News May 5, 2024

ஜெலன்ஸ்கிக்கு செக் வைக்கும் ரஷ்யா

image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா, அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் சேர்த்துள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ஊடக செய்திகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த செய்திக்கு பதிலடி கொடுத்துள்ள உக்ரைன், புதினுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்த சந்தேகத்தில் கைது செய்வதற்கான வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

ஃபிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

image

* தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
* நீ செல்லும் பாதியில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே அல்ல. பிறர் சென்ற பாதை!
* தயங்குபவர் கை தட்டுகிறார்..
துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.
* விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் ஒருபோதும் உறங்குவது இல்லை.

News May 5, 2024

இந்தியன்-2 ரிலீஸ் தேதி மாற்றம்?

image

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன்-2’. இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாக இருப்பதால், படத்தின் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகத் ரிலீஸை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

News May 5, 2024

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

image

கோடைகாலத்தில் உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவை என்பதால் பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பகல் நேரங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், மதிய உணவாக கேப்பை, கம்பு கூல் ஆகியவற்றை அருந்தலாம். எண்ணெயில் பொரித்த, அதிக காரம் உள்ள உணவுகள், டீ, காஃபி ஆகியவற்றைத் தவிக்கலாம்.

News May 5, 2024

30 ஆண்டுகளில் முதன்முறையாக

image

கடும் வெயில் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கோவை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால், 30 ஆண்டுகளில் முதன்முறையாக நீலகிரியில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News May 5, 2024

வரலாற்றில் இன்று: மே 5

image

▶1818 – சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்
▶1916 – இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் பிறந்த நாள்
▶1955 – மேற்கு ஜெர்மனி முழு விடுதலை அடைந்தது.
▶1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
▶சர்வதேச மருத்துவச்சிகள் தினம்

News May 5, 2024

மீண்டும் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார் கோலி

image

ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி மீண்டும் கைப்பற்றியுள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்புத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் கோலி (542), ருதுராஜ் (509), சாய் சுதர்சன் (424) ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!