news

News May 5, 2024

சூரிய தோஷம் நீங்க இதை செய்யுங்கள்!

image

ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகத்தின் மையமாகவும், முதன்மை பிதுர்காரகனாகவும் இருப்பவர் சூரியன். பூர்வீக சொத்துக்களில் பிரச்னை & வில்லங்கங்கள் ஏற்பட்டால், அதனை சூரிய தோஷம் என அழைப்பர். இந்த தோஷத்தால் மனம் வாடுவோர், விரதமிருந்து கோயிலுக்கு சென்று சூரியத்தேவருக்கு அபிஷேகம் செய்து, சிவப்புப்பூவால் அர்ச்சித்து, சூரியக்கவசம் பாடி, சர்க்கரை பொங்கல் படைத்து, வணங்கினால் அத்தோஷ பாதிப்புகள் என்பது ஐதீகம்.

News May 5, 2024

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு

image

சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில், தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News May 5, 2024

மலைப் பகுதிகளில் பரவலாக மழை

image

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செமீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செமீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6 செமீ, ஏற்காட்டில் 1.2 செமீ, வேலூரில் 1.1 செமீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல், சேலம், போச்சம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.

News May 5, 2024

ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் 36 ரன்கள்

image

ஐபிஎல்லில் 11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட RCB வீரர் மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் கூட ஆடாததால் ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடப்புத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் அவர் 0(vs CSK), 3(vs PBKS), 28(vs KKR), 0(vs LSG), 1(vs RR), 0(vs MI), 4(vs GT) என சொற்ப ரன்களே எடுத்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

News May 5, 2024

மூன்றாம் கட்டத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை நிறைவு

image

நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (மே 7) நடைபெற உள்ளது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பிஹார், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

News May 5, 2024

தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் இயங்காது

image

வணிகர் தினத்தையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதில் வணிகர் சங்கங்களை சார்ந்த லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பதால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக மையங்களும் இன்று மூடப்பட்டிருக்கும்.

News May 5, 2024

கல் குவாரியின் உரிமம் ரத்து

image

காரியாபட்டி அருகே ஆவியூரில் வெடிவிபத்து ஏற்பட்ட கல் குவாரியில் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே 1ஆம் தேதி இந்த கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு நடந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்டதை விட ஆழமாகத் தோண்டியது
கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News May 5, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
* வணிகர் தினத்தையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
* நெல்லை கிழக்கு மாவட்டச் காங்., செயலாளர் ஜெயக்குமார் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
* ஐபிஎல்லில் இன்று பிற்பகல் 3:30மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

News May 5, 2024

இன்று ஐபிஎல்லில் இரண்டு போட்டிகள்

image

ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடுகின்றன. இரண்டு போட்டிகளிலும் எந்தெந்த அணிகள் வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

News May 5, 2024

நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஆஜர்

image

தாம்பரம் அருகே ரயிலில் ₹4கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் பணியாளர் ஜெய்ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். ஏற்கெனவே 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!