news

News May 8, 2024

நாளை OTT -இல் வெளியாகும் ஆவேஷம்

image

ஃபகத் ஃபாசில் நடித்த ‘ஆவேஷம்’ திரைப்படம் நாளை அமேசான் பிரைம் OTT-இல் வெளியாகவுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்தது. கண்களாலேயே வில்லத்தனத்தை காட்டும் பகத், இப்படத்தில் தனது ஜாலி கலந்த வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

News May 8, 2024

இதிலும் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம்

image

தமிழ்நாட்டில் ஏப்.30ம் தேதி வரை 24,74,985 ஆண்கள், 28,98,847 பெண்கள், 284 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 53.74 லட்சம் பேர், அரசு வேலைக்காகப் பதிவுச் செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்குள் 10,69,609 பேர், 19 – 30 வயதுக்குள் 23,62,129 பேர், 31 -45 வயதுக்குள் 16,94,518 பேர், 46 – 60 வயதுக்குள் 2,40,537 பேர், 60 வயதிற்கும் மேற்பட்டோர் 7,323 பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர்.

News May 8, 2024

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

image

பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடுத்துள்ளார். அதில் மதக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கும் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்திருந்தது.

News May 8, 2024

அட்சய திருதியை அன்று எப்போது தங்கம் வாங்கலாம்?

image

அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் மென்மேலும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை தினம் மே 10ஆம் தேதி வருகிறது. அன்று காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 மணி வரை தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அன்றைய தினம் தங்கம் மட்டுமல்லாமல் அனைத்து விதமான சொத்துகளையும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

News May 8, 2024

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் கைவிடப்படுகிறதா?

image

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், ‘விடாமுயற்சி’ படம் கைவிடப்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானதால், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கூடுதல் பணம் தர தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லாததால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

News May 8, 2024

தமிழகத்தில் 66% குறைவான மழை பதிவு

image

தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான பருவத்தில் 66% குறைவான மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக பெய்ய வேண்டிய 7.7 செ.மீ மழை பதிலாக 2.6 செ.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை என 4 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. அதேபோல், சென்னையில் இயல்பை விட 99% குறைவான மழை பதிவாகியுள்ளது.

News May 8, 2024

EVM வைத்துள்ள மையங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா

image

மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துள்ள பாதுகாப்பு மையங்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா செயலிழந்தது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

News May 8, 2024

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு குடல் பரிசோதனை

image

வேங்கைவயல் விவகாரத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு குடல் மாதிரி பரிசோதனை தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே 6 சிறுவர்கள் உள்பட 31 பேருக்கு மரபணு பரிசோதனையும், இருவருக்கு குடல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

News May 8, 2024

காலாவதியான மது, பீர்களை விற்கக்கூடாது

image

காலாவதியான மதுபானம், பீர் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவு பறந்துள்ளது. சீர்காழியில் காலாவதியான மது குடித்த 2 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களே!, சரக்கை வாங்கிய உடன், காலாவதி தேதியை (EXPIRY DATE) செக் பண்ணுங்க.

News May 8, 2024

உயர்கல்வியில் சேரும் முன் கவனிக்க வேண்டியவை

image

▶குடிநீர் வசதி, கழிவறை வசதி, நூலக வசதி, உணவு வசதி உள்ளதா? ▶கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு எப்படி உள்ளது? ▶அந்த கல்லூரியில் படித்த எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? ▶விளையாட்டு மைதானம் உள்ளதா? ▶நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எத்தனை மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பட்டம் பெற்றுள்ளார்கள்? ▶கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.

error: Content is protected !!