News May 8, 2024
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் கைவிடப்படுகிறதா?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், ‘விடாமுயற்சி’ படம் கைவிடப்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானதால், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கூடுதல் பணம் தர தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லாததால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
பொய் பேசுவது ராகுலின் கொள்கை: அமித்ஷா

விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் பொய் பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் விவசாயிகள் பலிகடா ஆக்கியதாகவும் சாடியுள்ளார்.
News February 16, 2026
தவெகவில் இணைந்த மேலும் ஒரு அதிமுக Ex MLA

தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின் பல அதிமுக Ex MLA-க்கள் தவெகவில் இணைந்து வருவது EPS-க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வரிசையில் வாசுதேவநல்லூர் அதிமுக Ex MLA மனோகரன் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து விஜய் கட்சியில் இணைத்துக் கொண்டார். வரும் நாள்களில் இன்னும் சில அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News February 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை ▶குறள் எண்: 611 ▶குறள்:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
▶பொருள்: நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.


