India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.
* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.
* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.
* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.
* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச் சொல்லால் பயனில்லை.
* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.
பாஜகவினருக்கு அரசியலமைப்பு என்பது வெற்று காகிதத் துண்டுதான் என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கேரளாவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து போராடியவர்களை, பயங்கரவாதி என பாஜக முத்திரை குத்தியது. நமது உரிமையை நிலைநாட்ட அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி தொடர்ந்து போராடுகிறோம். அனால், அதை அவர்கள் மதிப்பதில்லை என சாடியுள்ளார்.
DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் SRH அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியில், டாஸ் வென்ற DC அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் பேட்டிங் செய்த SRH அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக, 267 ரன்களை இலக்காக துரத்திய DC அணி, 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பிரபாஸ் நாயகனாக நடித்துவரும் ‘கல்கி 2898 கி.பி’ படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அமிதாப்பின் போஸ்டரை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். அதில் முகத்தை முழுவதும் துணியால் மறைத்தவாறு அவர் அமர்ந்துள்ளார். மேலும், நாளை இரவு 7:15 மணிக்கு இப்படத்தின் அப்டேட்டை வெளியிடுவதாக அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்சன் லோகோவை காவி நிறமாக மாற்றியதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தேர்தலில் கவனம் செலுத்திவரும் நிலையில், தேர்தல் நடத்தைகளை மீறி பாஜகவின் கொடூர காவிமயமாக்கலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் இதன்மீது நடவடிக்கை எடுத்து, லோகோவை பழையபடி நீல நிறத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
20 ஆண்டுகள் கழித்து ரீரிலீஸ் ஆன ‘கில்லி’ படம் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பி வருகிறது. “ஆல் ஏரியாவிலும் கில்லிடா…” என்பது போல வசூல் அமோகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் வீடு அமைந்துள்ள ஏரியா சென்னையில் எங்கு இருக்கிறது என ரசிகர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். ஆனால், உண்மையில் அது மாமல்லபுரத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட செட் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
நவகிரகங்களின் நீதிமானான சனி பகவானின் அஸ்தமன செயல்பாடு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில், மிதுனம், கடகம், சிம்மம், மீனம் ராசியினருக்கு கோடி கோடியாக பணம் கொட்டப் போகிறது. குறையில்லாத செல்வம், வியாபாரத்தில் லாபம், புதிய தொழில் தொடங்கும் யோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற பல சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
தமிழ்நாட்டில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு நடந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 69.46% எனக் குறைத்து அறிவிக்கப்பட்டது விவாதமாகியுள்ளது. இது குறித்து விளக்கிய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, வாக்குச்சாவடியின் அதிகாரிகள் அளிக்கும் தோராயக் கணக்கே ஊடகத்திடம் அளிக்கப்படும். இறுதியாகவே 17சி படிவத்தில் கையெழுத்திட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தெரியும் என்றார்.
சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அழற்சிக்கு சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த உப்பு நீர், தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய தொல்லைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. சளி, சைனஸ் தொற்றுகளை தடுக்கவும் இந்த உப்பு கரைசல் உதவி புரிகிறது.
இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’ படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் “மெலடி…” என்ற பாடலின் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டது. அதில், பெண் வேடமிட்டு குத்தாட்டம் போடு கவின், பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண் போலவே காட்சியளிக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், கவினைப் பார்க்க மீரா மிதுன் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.