India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஸ்வினிடம் இருந்து நிறைய கிரிக்கெட் நுட்பங்களை கற்றுள்ளதாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். பந்து வீச்சு தொடர்பாக எழும் சிக்கல்களை, அஸ்வின் மிக எளிதாக புரிய வைப்பார் எனவும் அவர் புகழ்ந்துள்ளார். நேற்றைய RRvsDC போட்டியில், ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்த நிலையிலும், குல்தீப் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திமுக அரசு மக்களின் கண்ணீரைத் துடைக்காமல், கண்ணீரை வரவழைக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நீர் மேலாண்மை மற்றும் குடி மராமத்து திட்டத்தை முழுமையாக தமிழக அரசு கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு திமுக அரசே காரணம் எனவும் விமர்சித்தார். தமிழக அரசு இனியாவது விழித்துக்கொள்ளுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
+2 முடித்த மாணவர்கள், எந்த கல்லூரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்விக் கடன், உதவித் தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை, 14417 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு அறியலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், துணைத் தேர்வு தொடர்பான விவரங்களை அறிய, அந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் காலை 8 – இரவு 8 மணி வரை சந்தேகங்களை கேட்கலாம்.
+2 பொதுத்தேர்வில் 487 மார்க் எடுத்த ராமநாதபுரம் மாணவி ஆர்த்திக்கு உதவி செய்ய இயக்குநர் சேரன் முன்வந்துள்ளார். தந்தை இறந்த நிலையில், மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் தவிப்பதாக ஆர்த்தி கண்ணீர்விட்டு உதவிக் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்த இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பதிவில், “அந்த தங்கைக்கான முகவரி கிடைத்தால் என்னால் முடிந்த உதவி செய்ய இயலும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
20-25 பந்துகளில் போட்டியையே மாற்றும் திறமை ஷிவம் துபேவிடம் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஐபிஎல் தொடர்பில் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து, கேளிக்கைக்காக துபே (ஸ்ட்ரைக் ரேட் 170) சிக்ஸ் அடிக்கிறார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வெறியாட்டம் போடும் அவரது ஆட்டத்தை உலகக் கோப்பையில் பாருங்கள்” எனக் கூறினார்.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாகக் கூறிய காங்., மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “ராகுலின் வழிகாட்டியாக இருக்கும் நபரின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளில் உள்ள இனவெறியைப் பாருங்கள். இந்தியர்கள் குறித்து இப்படிப் பேச INDIA கூட்டணி வெட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற பழனியாண்டியை, அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததுடன், பழனியாண்டியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் முதல் 10 இடங்களில், சீனாவின் 5 நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் நாடுகளில், டோக்கியோ அதிக மில்லியனர்கள் வாழும் நகரமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தோல்வி பயத்தில் பிரதமர் மோடி, தனது நண்பர்களான அம்பானி, அதானியை விமர்சிக்க தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். பிரதமர் நாற்காலி விரைவில் பறிபோகப் போகிறது என்பதை உணர்ந்துள்ள மோடி, அதானி, அம்பானிகளை காங்கிரஸுடன் இணைத்து பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முன்னதாக, பரப்புரையில் பேசிய மோடி, இப்போதெல்லாம் ராகுல் ஏன் அம்பானி, அதானிகளை பற்றி பேசுவதில்லை என விமர்சித்திருந்தார்.
கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் (71) என்பவர், 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக 1981இல் 4 சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர், படிப்படியாக கிரேன், ஜேசிபி, அதி கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசென்களை பெற்றதாக கூறினார். இளையோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர், கேரளாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.