news

News May 14, 2024

24 மணி நேரமும் ஹாலிவுட் படங்கள்; விரைவில் புது சேனல்

image

சன் தொலைக்காட்சி குழுமம் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சேனல்களைத் தொடங்கியுள்ளது. இதன் அடுத்தக் கட்டமாக ஹாலிவுட் படங்களுக்கென்றே பிரத்யேகமாக ‘சன் ஹாலிவுட்’ என்ற சேனலைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வருகிறார்கள். அப்படி தமிழில் டப் செய்து வெளியான படங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் ஹாலிவுட்.

News May 14, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது, எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான்.
➤இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். ➤எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே, எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.
➤எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை, ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.

News May 14, 2024

ஆவி பிடிப்பதால் இத்தனை நன்மைகளா?

image

*ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும். இதனால் முகப்பருக்கள் குறையும்.
* சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது.
* ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். மேலும், சைனஸ் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.

News May 14, 2024

சபரிமலையில் 14ஆம் தேதி நடைதிறப்பு

image

வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின் மே 15 – 19 வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மே 19ஆம் தேதி அரிவராசனம் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

மே 14 : வரலாற்றில் இன்று

image

➤1264 – இங்கிலாந்தின் மூன்றாம் ஹன்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.
➤ 1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் கண்டறிந்தார்.
➤1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
➤1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
➤ 2012 – நேபாளத்தில் அக்னி ஏர் வானூர்தி வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

News May 14, 2024

இந்திய அணியின் ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ

image

டி 20 உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கு பெறும் அணிகள் பிரத்யேக ஜெர்ஸியில் களமிறங்குவது வழக்கம். அந்த வகையில், இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜெர்ஸி மற்றும் வீரர்களுக்கான உபகரண உடைகளை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழாவில் ரோஹித் ஷர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கலந்து கொண்டனர். இந்திய அணி ஜூன் 5இல் தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து விளையாட உள்ளது.

News May 14, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
◾விளக்கம்: செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

News May 14, 2024

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு

image

டி20 உலக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ட் எட்வர்ட்ஸ் தலைமையில், ஆர்யன் தத், பாஸ் டி லீட், டேனியல் டோரம், ப்ரெட் கிளாசென், லோகன் வான் பீக், மைக்கேல் லெவிட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

News May 14, 2024

பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி காலமானார்

image

பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி(72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வராகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

News May 14, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

error: Content is protected !!