news

News May 14, 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் 85.75% தேர்ச்சி

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 85.75%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 98.09% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.61%, பெண்கள் பள்ளிகளில் 94.46%, ஆண்கள் பள்ளிகளில் 81.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 14, 2024

11th Result: பாடங்கள் வாரியான தேர்ச்சி விகிதம்

image

*அறிவியல் பாடப் பிரிவுகள்- 94.31%
*வணிகப்பிரிவு பாடப்பிரிவுகள் – 86.93%
*கலைப் பிரிவுகள் -72.89%
*தொழிற்பாடப் பிரிவுகள் – 78.72%
▶இயற்பியல் – 97.23% ▶வேதியியல் – 96.20% ▶உயிரியல் – 98.25% ▶கணிதம் – 97.21% ▶தாவரவியல் – 91.88% ▶விலங்கியல் – 96.40% ▶கணினி அறிவியல் – 99.39% ▶வணிகவியல் – 92.45% ▶கணக்குப் பதிவியல் – 95.22%

News May 14, 2024

+1 ரிசல்ட்: ஆண்கள் vs பெண்கள் யார் டாப்?

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,84,351 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 3,35,396 (87.26%) பேரும், 4,26,821 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 4,04,143 (94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் (7.43%) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 8221 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 7,504 (91.27%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 14, 2024

+1 தேர்வில் 100/100 எடுத்த மாணவர்கள்

image

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. அதில், கணினி அறிவியல் தேர்வில் 3432 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியல் – 696, வேதியல் – 493, வணிகவியல் – 620, பொருளியல் – 741, கணக்குப் பதிவியல் – 415, கணிதம் – 779, தமிழ் – 8, ஆங்கிலம் – 13 ஆகியோர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 எடுத்தோரின் எண்ணிக்கை 8418.

News May 14, 2024

BREAKING: +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

image

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News May 14, 2024

தமிழகத்தில் மின் நுகர்வு குறைகிறது

image

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஏப்ரல் மாதத்தில் தினசரி மின் நுகர்வு 45 கோடி யூனிட்கள் வரை உயர்ந்தது. தற்போது மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தினசரி மின் தேவை 36 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. இதனால், இனி மின்வெட்டு இருக்காது என்று நம்பப்படுகிறது.

News May 14, 2024

Apply Now: நாளை கடைசி

image

உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான (Assistant Surgeon) 2,553 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நாளையே கடைசி நாள் ஆகும். UGC அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றி விண்ணப்பதாரர்கள், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ₹56,100- ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

நீதிமன்றத்தில் ஆஜராகிறார் இபிஎஸ்

image

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆஜராகிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இன்று ஆஜராகிறார்.

News May 14, 2024

OnThisDay: ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

image

2016ஆம் ஆண்டு இதே நாளில், ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை 229(96) விராட் கோலியும், டிவில்லியர்ஸும் பதிவு செய்தனர். குஜராத் லயன்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலி-டிவில்லியர்ஸ் கூட்டணி, 15 Four, 20 Six என விளாசி எதிரணியை திணறடித்தனர். கோலி 109(55), டிவில்லியர்ஸ் 129*(52) ரன்கள் குவித்து அசத்தினர்.

News May 14, 2024

சில்லரை பணவீக்கம் சற்றே குறைந்தது

image

நாட்டில் சில்லரை பணவீக்கம் சற்றே குறைந்து 4.83 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது, கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு குறைவு ஆகும். வெகுஜன மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய சில்லரை பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி போராடி வருகிறது. ஆனால், கொரோனாவுக்கு பின் உயர்ந்த பணவீக்கம், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!