India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், 8,11,172 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,39,539 பேர் (91.17%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு கர்நாடகா உரிய நீர் திறக்காத நிலையில், டெல்லியில் மே 21ஆம் தேதி எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. மேட்டூர் அணையில் 50 அடிக்கு மட்டுமே நீர் உள்ளதால், டெல்டா விவசாயிகளுக்கு நீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் கர்நாடகாவும் நீர் திறக்க மறுப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கவுண்டமணியின் 5 கிரவுண்ட் நிலம், ₹65 லட்சத்தையும் அவரிடமே கொடுக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலத்தைக் கவுண்டமணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
FLiRT என்ற புதிய வகை கொரோனா இந்தியாவில் இதுவரை 91 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், இருமல், தலை மற்றும் உடல் வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். அதேபோல், சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். எனவே, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பரவிவரும் FLiRT வகை கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் ஆய்வாளர்களிடம் இல்லை. ஆனால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி உடலினை தாக்கும் திறன் கொண்டவை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே FLiRT வகை தொற்று உள்ளதால், இதன் வீரியத் தன்மை குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
FLiRT என்று சொல்லப்படக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது. ஓமிக்ரான் வைரசின் துணை வகையான இந்த FLiRT, ஜனவரி மாதம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தானே, புனே, நாசிக் என பல நகரங்களில் 91 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை பதிவாகியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.
நாடு முழுவதும் எங்கு, எப்போது தேர்தல் நடந்தாலும் அதற்கான மை, மைசூரு நகரில் இருந்துதான் அனுப்பி வைக்கப்படுகிறது. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக இந்த மை பயன்படுத்தப்பட்டது. மைசூருவில் உள்ள ‘மைசூரு பெயிண்ட்ஸ் & வார்னிஷ் லிமிடெட்’ கம்பெனிக்கு இந்த மை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. அன்று முதல் அதே நிறுவனம்தான் தேர்தலுக்கான மையினை தயாரித்து வருகிறது.
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்தினர். அதன்பின், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பட்டியல்: ▶தனுஷ்-ஐஸ்வர்யா, ▶சமந்தா-நாக சைதன்யா, ▶அமலா பால் -ஏ.எல்.விஜய், ▶செல்வராகவன்-சோனியா அகர்வால், ▶விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ், ▶டி.இமான்-மோனிகா, ▶பிரபுதேவா-ராம்லாத்
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, வரலாற்று சாதனை படைத்துள்ளார். சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் காலிறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அவர், உலக தரவரிசையில் 24ஆம் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை எந்தவொரு இந்திய வீராங்கனையும் இந்த சாதனையை செய்ததில்லை.
Sorry, no posts matched your criteria.