India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நள்ளிரவு 1 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருமானவரி பிடித்தம் தொடர்பான விவரங்கள் எதையும், ஓய்வூதியதாரர்களிடம் கேட்கவில்லை என அரசு கருவூலத்துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய, பழைய முறைப்படி வருமானவரி பிடித்தம் தொடர்பான விவரங்கள், பான் கார்டு எண்ணை ஓய்வூதியதாரர்கள் சமர்பிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்தது. இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கருவூலத்துறை, அதுபோன்ற தகவலில் உண்மை இல்லை என விளக்கமளித்துள்ளது.
*மேஷம் – முயற்சிக்கு ஏற்ற பலன்
*ரிஷபம் – பயணம் செல்லும் வாய்ப்பு
*மிதுனம் – சாதகமான நாள்
*கடகம் – நிதானம் தேவை
*சிம்மம் – பாராட்டு கிடைக்கும்
*கன்னி – சிந்தனை வேண்டும்
*துலாம் – சலனம் ஏற்படும்
*விருச்சிகம் – ஆர்வம் அதிகரிக்கும்
*தனுசு – சுகமான நாள்
*மகரம் – விருப்பம் நிறைவேறும் *கும்பம் – பிரயாசை உண்டாகும் *மீனம் – கீர்த்தி கிடைக்கும்
பிரிட்டன் அரசர் 3ம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் ராணுவ தலைமை பொறுப்பை இளவரசர் வில்லியமிடம் அவர் வழங்கியுள்ளார். இந்நிலையில் ஹாம்ப்சயரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சார்லஸ் சென்றபோது அங்கிருந்த முன்னாள் வீரர் ஒருவரிடம் பேசினார். அப்போது முன்னாள் வீரர் தாம் சுவைத் திறனை இழந்து விட்டதாக கூறவே, பதிலுக்கு தாமும் இழந்து விட்டதாக சார்லஸ் தெரிவித்துள்ளார்.
SRH அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி மோசமாக தோல்வியடையவே, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே.எல்.ராகுலை மைதானத்தில் கடிந்துகொண்டார். இதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் ராகுலை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். இந்நிலையில் இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் ஹோப் அடித்த பந்தை பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார் ராகுல். இதையடுத்து கோயாங்கோ எழுந்து நின்று கை தட்டினார்.
அங்காடி தெரு பட இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள தலைமை செயலகம் என்ற வெப் சீரிஸ், ஜீ5 ஓடிடியில் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடாமல் இருப்பதும், சாதி பெயரை கேட்காமல் இருப்பதும் அரசியலே என்றார். 22 ஆண்டுகளில் 7 படம் மட்டுமே இயக்கியுள்ளதாகவும், இதையடுத்து வெப் சீரிஸ் இயக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து லக்னோ அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் 12, கே.எல்.ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 5, ஹூடா 0 ரன்களில் ஆட்டமிழக்கவே LSG தடுமாறி வருகிறது. சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 3, அக்ஷர் படேல் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
உலக அளவில் வேலைவாய்ப்பு தகவல்களை பகிரும் முன்னணி நிறுவனங்களில் Indeed இணையதளமும் ஒன்று. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் 2,200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது. இதையடுத்து தற்போது 1,000 ஊழியர்களை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் 8% ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக அந்த நிறுவன தலைமை நிர்வாகி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை அருகே நேற்று 100 அடி விளம்பர போர்டு, புழுதி புயல் மற்றும் மழையின் காரணமாக சரிந்தது. இதில் நேற்று 8 பலியான நிலையில் இன்று உயிரிழப்பு 14ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கையும் 74ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விளம்பர போர்டு வைத்த ஈகோ மீடியா உரிமையாளர் பாவேஸ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருகிறது.
Sorry, no posts matched your criteria.