News May 14, 2024
நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நள்ளிரவு 1 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News December 15, 2025
ஈரோடு: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News December 15, 2025
இரண்டரை ரூபாய் நோட்டு பாத்திருக்கீங்களா?

கைகளில் காசையே அதிகளவில் பார்க்காத இன்றைய UPI ஜெனரேஷனை கண்டிப்பாக இந்த செய்தி ஆச்சரியப்படுத்தும். அவ்வளவு ஏன், எட்டணா, நாலணா போன்றவற்றை பயன்படுத்தியவர்களும் இதை கண்டிருக்க மாட்டார்கள். 1918-ல் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு (2 ரூபாய் 8 அணா) புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அடுத்த 8 வருடங்களிலேயே இந்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டது. நீங்க நாலணா, எட்டணா யூஸ் பண்ணிருக்கீங்களா?
News December 15, 2025
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை, இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,460-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹99,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ₹320 மட்டும் உயர்ந்தால் போதும், ஒரு சவரன் ₹1 லட்சமாக அதிகரிக்கும்.


