news

News May 16, 2024

9 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலையில் இருந்து லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கோவையில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மழையால் தண்ணீர் தேங்கி சாலைகளில் வழுக்கும் சூழல் உண்டாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

அரசுப் பேருந்துகளை கவனமாக இயக்க உத்தரவு

image

கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

News May 16, 2024

₹14,769 கோடி வருவாய் ஈட்டிய எச்.ஏ.எல்

image

2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) ₹14,769 கோடியை ஒருங்கிணைந்த வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹12,494 கோடியாக இருந்த வருவாய் தற்போது 18% உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 52.2% உயர்ந்து, ₹4,309 கோடியாக உள்ளது.

News May 16, 2024

புதிய அரசின் திட்டம் ரெடி

image

தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் புதிய பாஜக அரசின் திட்டம் தற்போதே ரெடியாக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, மத்தியில் மீண்டும் பாஜக அரசு ஆட்சி அமைந்ததும் முதல் நாளிலேயே திட்டங்களை செயல்படுத்தும் பணி தொடங்கும் என்றார். கடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மோடி, புதிய அரசின் 100 நாள் திட்டத்தை வகுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 16, 2024

தோழமைக் கட்சிகளுக்கு சங்கடம் ஏற்படாது

image

காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்நாடு காங்., போராடும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம் என நாங்கள் கூறுவதால் தோழமைக் கட்சிகளுக்கு சங்கடம் ஏற்படாது எனக்கூறியவர், காமராஜரின் கனவை முதல்வர் ஸ்டாலின் நனவாக்கி வருகிறார் என்றார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி குறித்து அப்போது தலைமை முடிவு செய்யும் என்றார்.

News May 16, 2024

2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல்

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா SRH?

image

ஹைதராபாத், குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்றபின் டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை நீடித்தால் போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். இதனால், தற்போது 14 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் SRH 15 புள்ளிகள் பெற்று எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

News May 16, 2024

மத்திய ஆசியாவில் சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா

image

இந்தியா & ஈரான் இடையே கையெழுத்தான சாபஹார் ஒப்பந்தம் புவிசார் அரசியலில் சீனாவுக்கு விழுந்த மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது. ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள குவாதர் துறைமுகத்தை பாகிஸ்தானும் சீனாவும் மேம்படுத்தி வருகின்றன. அதற்கு செக் வைக்கும் வகையில், (370 மில்லியன் டாலர் மதிப்பிலான) இந்த துறைமுகம் மத்திய ஆசியா & யூரேசியாவிற்கு இந்தியாவின் வணிகப் பாதைகளை திறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

கட்சியை கட்டமைக்கும் பணியில் தீவிரம் காட்டும் கமல்

image

2026 தேர்தலுக்கு முன்பாக கட்சியின் கட்டமைப்பை உறுதியாக்கும் பணியில் மநீம தலைவர் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ‘கட்சியில் கட்டமைப்பே இல்லை’ என திமுக சீனியர்கள் மக்களவைத் தேர்தலின்போது சொன்னதாகக் கூறப்படுகிறது. இதுவே வருங்காலங்களில் சீட் பங்கீட்டில் பிரச்னையை கிளப்பிவிடக் கூடாதென்ற நோக்கிலும், கட்சி நலன் சார்ந்தும் தனி திட்டத்தை கமல் தொடங்கியுள்ளார்.

News May 16, 2024

ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா?

image

தொலைதூர ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில், லோயர் பெர்த், மிடில் பெர்த், அப்பர் பெர்த் என 3 இருக்கைகள் உண்டு. இதில் மிடில் பெர்த் இருக்கைக்கு தனி விதி உள்ளது. அதில், மிடில் பெர்த்தை பகலில் கீழே எடுத்துவிட்டு தூங்கக் கூடாது, இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரையே பயன்படுத்த வேண்டும், அதன்பிறகு யாரேனும் தூங்கினால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க சக பயணிகளுக்கு உரிமை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!