news

News May 17, 2024

3 நாள்களில் முதல்வரை அறிவிப்போம்

image

24 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நவீன் பட்நாயக்கிற்கு மக்கள் ஓய்வு தர உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடனே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் ஆட்சியை இழக்கப்போவது கண் கூடாத தெரிவதாக கூறிய அவர், தேர்தல் முடிவு வந்த 3 நாள்களில் பாஜக தன்னுடைய முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றார். ஒடிசாவில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு இதுவரை தேர்தல் நடைபெற்றுள்ளது.

News May 17, 2024

பயிற்சியாளர் பதவியை விரும்பவில்லை

image

கடினமான காலக்கட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டு நிறைவாக பணியாற்றியதாக கூறிய அவர், மீண்டும் ஐபிஎல் அணிக்கோ அல்லது இந்திய அணிக்கோ பயிற்சியாளராக வருவதற்கு விரும்பவில்லை என்றார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் விரைவில் விலக உள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News May 17, 2024

இந்தியாவே தேர்தல் முடிவை திரும்பி பார்க்கும்

image

ஆந்திராவில் 151 எம்எல்ஏ, 22 எம்பி இடங்களில் YSRCP வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், இந்தியாவுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கும் என்ற அவர், கடவுள் அருளால் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெறுவோம் என்றார். ஆந்திராவில் 25 மக்களவை மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.

News May 17, 2024

முதல்வரை பார்த்து பிரதமர் கற்றுக்கொள்ள வேண்டும்

image

பிரதமர் மோடி அனைத்து மக்களுக்குமான பிரதமராக இருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி பொதுவானவராக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை போல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதுவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாது எனக் கூறினார்.

News May 17, 2024

கொடைக்கானல் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்

image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று மலர்க்கண்காட்சி தொடக்க உள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் 61ஆவது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைப்பெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் இருந்து மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், இன்னிசை கச்சேரி, மேஜிக் ஷோவும் பூங்காவில் நடைபெற உள்ளது.

News May 17, 2024

இன்றைய நல்ல நேரம்

image

மே – 17 | வைகாசி- 4
▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30AM -10:30AM, 04:30PM-05:30PM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 PM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
▶குளிகை: 07:30 AM – 09:30 AM
▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம்
▶ திதி : தசமி

News May 17, 2024

பாதுகாவலரால் நெருக்கடியில் கெஜ்ரிவால்

image

சுவாதி மாலிவாலை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவாலை, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுவாதி மாலிவால் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி, பாஜக பரப்புரையில் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

News May 17, 2024

ஜார்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் ED காவல்

image

ஜார்கண்ட் அமைச்சர் அலம்கீர் ஆலமுக்கு 6 நாள் ED காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலமை ED நேற்று கைது செய்தது. அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இருந்து ₹35 கோடியை, ED அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

News May 17, 2024

எடை குறைப்புக்கு உதவும் பூண்டு

image

பூண்டு உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு செல்கள் உருவாவதை தடுப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. பூண்டு தெர்மோஜெனீசிஸை அதிகரிக்கிறது, இது அதிக கொழுப்புகளை எரிக்கவும், எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. படுக்கைக்கு முன் ஒரு பல் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டு வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது.

News May 17, 2024

பாஜகவை விமர்சித்த மாயாவதி

image

மக்களை பற்றி பாஜகவுக்கு எவ்வித அக்கறையும் இருந்ததில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இதுபற்றி துளிகூட பாஜக கவலைப்படவில்லை என்று விமர்சித்தார். வரிப்பணத்தில் இருந்து மக்களுக்கு தரும் ரேஷனை, பாஜக சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றார்.

error: Content is protected !!