News May 17, 2024
பாதுகாவலரால் நெருக்கடியில் கெஜ்ரிவால்

சுவாதி மாலிவாலை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவாலை, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுவாதி மாலிவால் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி, பாஜக பரப்புரையில் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
Similar News
News February 19, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப்.20) நடைபெற உள்ளது. அரூர் வட்டம், பாட்ஷா பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
News February 19, 2026
மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.