India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பானின் தோஷிபா நிறுவனம் ஊழியர்களில் 4,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 6% ஆகும். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அந்நிறுவனம், நிர்வாக சிக்கல் மற்றும் முறைகேடுகளால் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில், தலைமையிடத்தை டோக்கியோவில் இருந்து கவாசாகிக்கு மாற்ற திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், உள்ளூர் பணியாட்களை குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் காப்பீட்டு விற்பனைத் தளங்களில் 10இல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு, வீட்டுக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகுமுறையோடு விற்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, சில வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடன், டெபாசிட்டுகளைப் பெற அணுகும்போது காப்பீட்டுகளைத் திணிப்பதாகத் தெரிகிறது.
▶ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’, ▶சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ஜார்ஜ் மரியன் நடித்துள்ள ‘எலக்சன்’, ▶செல்வம் மாதப்பன் இயக்கத்தில் பிரஜன், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘படிக்காத பக்கங்கள்’ ஆகிய 3 திரைப்படங்களும் இன்று (மே 17) திரையரங்குகளில் வெளியாகின்றன.
இந்த ஐபிஎல் சீசன் நாங்கள் நினைத்தது போல் முடியவில்லை என்றாலும், நிறைய பாடங்களும் நீங்காத நினைவுகளும் கிடைத்துள்ளன என்று GT கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். SRH-க்கு எதிரான நேற்றைய கடைசி போட்டி ரத்தானது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், 3 வருடங்கள் இந்த அழகான குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், தங்களை ஆதரித்து அன்பைக் காட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் சென்னை வீட்டுக்கு அமைச்சரின் பரிந்துரையில் இலவசமாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியதாக எதிர்ப்பு எழுந்ததால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது, சூர்யா குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அரை லிட்டர் பாலில் ஏலக்காயை போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவைக்க வேண்டும். பன்னீர் ரோஜா இதழ்களை நன்கு ஆய்ந்து அலசி, 2 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து, அரைக்க வேண்டும். ஆறவைத்த பாலுடன் பாதாம், பிஸ்தா விழுது சேர்த்து, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும். தேன், குங்குமப்பூ சேர்த்து நன்றாகக் கலக்கி, குளிர வைத்தால் சுவையான ரோஸ் மில்க் சர்பத் ரெடி.
▶விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி, அபிராமி, கௌரி, ஜனனி, ஆதித்யா பாஸ்கரன், சுபாஷ் நடித்துள்ள ‘ஹாட்ஸ்பாட்’ – அமேசான் பிரைம் ▶வசந்த பாலன் இயக்கத்தில் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘தலைமைச் செயலகம்’ வெப் தொடர் – ஜீ 5 ▶சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள ‘தி பாய்ஸ்’ – ஆஹா ▶ராஜமௌலி இயக்கியுள்ள ‘தி கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற அனிமேஷன் வெப் தொடர் – ஹாட்ஸ்டார்
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, CSK அணி 4ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே வேளை, 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் RCB அணி இலக்கை அடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். யார் வெற்றி பெறுவார்?
*பெற்றோரைப் பார்த்தே குழந்தைகள் வளர்வதால், அவர்கள் முன் பேசும்போது கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். *மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்யக் கூடாது. அவ்வாறு செய்வதால், அவர்களின் தனித்திறன் பாதிக்கப்படும். *துரித உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். *தீய பழக்கங்களில் இருந்து விலகி, பெற்றோர் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.