India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வோடாபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் ₹7,674 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 9.85% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நஷ்டம் ₹6,419 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் ₹31,238 நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில் தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோட் எடுத்து செல்வது நல்லது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் 4ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் அவர், 1,066 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதீப் ராய் 689 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். இந்நிலையில், கபில் சிபலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு வடகொரியாவை ரஷ்யா நம்பியிருப்பதாகவும், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவை தலமாக கொண்டு செயல்படும் 5 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை எட்டாத பட்சத்தில் தங்களிடம் பிளான் B இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பிளான் A வெற்றி பெற 60%க்கும் குறைவான வாய்ப்புகளே இருக்கும் போதுதான் பிளான் B-ஐ பயன்படுத்துவோம் எனவும், ஆனால் அதற்கான தேவை ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். பிளான் B என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹54,160க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹92.50க்கும், ஒரு கிலோ ₹92,500க்கும் விற்பனையாகிறது.
டி20 கிரிக்கெட்டுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை, ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (861) முதலிடத்திலும், ஜெய்ஸ்வால் (714) 6ஆவது இடத்திலும் உள்ளனர். பவுலிங் தரவரிசையில், அக்சர் படேல் (660) 4ஆவது இடத்திலும், ரவி பிஷ்னோய் (659) 5ஆவது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டருக்கான தரவரிசையில், ஹர்திக் பாண்டியா (185) 7ஆவது இடத்தில் உள்ளார்.
‘G.O.A.T’ படத்தின் 50% டப்பிங் நிறைவடைந்ததாகவும், ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதமுள்ள டப்பிங் பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், VFX பணிகளை புகழ்பெற்ற லோலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இந்நிறுவனம் ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அதிமுக படுதோல்வி அடைந்தால் தலைமை நெருக்கடியைச் சந்திக்கும் எனவும் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.