News May 17, 2024
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில் தொழிற்சாலை, உந்துசக்தி பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Similar News
News July 11, 2025
20 தொகுதிகள்… திமுகவை நெருக்கும் மதிமுக

20 தொகுதிகளை ஒதுக்கக்கோரி திமுகவை மதிமுக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மதிமுக உள்ளது. இதை சுட்டிக்காட்டி அண்மைகாலமாக மதிமுக பேசி வருகிறது. மு.க. ஸ்டாலினிடம் 20 தொகுதிகள் பட்டியலை அளித்து, இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்கும்படி வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
News July 11, 2025
ODI கேப்டன்: ரோஹித் OUT! சுப்மன் கில் IN!

இளம் வீரர் சுப்மன் கில் இந்திய ODI அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. 2027 ODI உலக கோப்பையை மையப்படுத்தி இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தற்போதைய ODI கேப்டன் ரோஹித் சர்மாவிடமும் BCCI பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அடுத்து நடைபெறும் இலங்கை தொடரில் கில் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
News July 11, 2025
₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.