India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான சிந்தெடிக் & எம்.டி.எம்.ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறிய அவர், போதைப் பொருள் மையமாக தமிழகம் மாறி இருப்பதற்கு திமுக அரசே முக்கிய காரணமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 66 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 1133 சிக்சர்கள் பதிவாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், இதுவே அதிக சிக்சர்கள் பதிவான சீசன் ஆகும். ▶அதிக சிக்சர்கள் அடித்த அணிகள்: SRH-146, RCB- 141. ▶குறைவான சிக்சர்கள் அடித்த அணிகள்: GT- 67, LSG- 88, ▶அதிக சிக்சர்களை வழங்கிய அணிகள்: DC- 144, RCB- 130, குறைவான சிக்சர்களை வழங்கிய அணிகள்: CSK, RR தலா 86.
சுவாதி மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை: மவுனம் சாதிப்பது ஏன்? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். மாலிவால் குற்றம்சாட்டிய பிபவ் குமாருடன் அவர் வெளிமாநிலங்களுக்கு செல்கிறார் என விமர்சித்த நிதியமைச்சர், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் அனைவரின் முன்னிலையிலும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்குப் பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் ₹2.35 கோடி – ₹3.53 கோடி வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 7 பயணிகளை அழைத்துச் செல்லவும், 100 மணி நேரத்திற்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்தப் போவதாக நார்வே அரசின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியின்போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாகக் குற்றம்சாட்டிய நார்வே அரசு, விதிமீறல் நிறுவனங்களின் பட்டியலில் அதானி நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கெனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும், வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய CSK வீரர்கள்:
▶எம்.எஸ்.தோனி 84*(48) – 2019
▶டேவன் கான்வே 83(45) – 2023
▶அம்பதி ராயுடு 82(53) – 2018
▶சுரேஷ் ரெய்னா 62(35) – 2015
▶ஷிவம் துபே 52(27) – 2023
▶துஷர் தேஷ்பாண்டே 3/45 – 2023
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்த பின், பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாய், மம்தா பானர்ஜி குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. சந்தேஷ்காலியின் பாஜக வேட்பாளர் ₹2,000க்கு வாங்கப்பட்டதாக TMC விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலளித்த அபிஜித், அப்படியானால் மம்தாவின் விலை ₹10 லட்சமா எனக் கேட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்., தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உடனான நட்பு குறித்து, விராட் கோலி பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சுனில் சேத்ரி தனது நெருங்கிய நண்பர் என்றும், ஓய்வை அறிவிக்கப் போவதாகத் தனக்கு முன்பே தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், இந்த முடிவு அவருக்கு நிம்மதியை தரும் என்றும், அவர் மிகவும் நல்ல மனிதர், அவருக்கு எல்லாமே சிறப்பானதாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும், ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ( மாதம் ரூ.8,500) வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.