India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரான பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், இந்தச் சம்பவம் கெஜ்ரிவால் வீட்டின் டிராயிங் அறையில் நடந்ததாகவும், அந்நேரத்தில் முதல்வர் வீட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பிபவ் குமார் தனது முகத்தில் 7-8 முறை அறைந்ததாகவும், மார்பு, வயிறு பகுதிகளில் எட்டி உதைத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவில் இஸ்லாமியர், சர்வாதிகார ஆட்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், பேட்டி அளிக்கும்போது, திவால் அரசு, கொடூர சட்டங்கள் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்க்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களை ஆய்வு செய்து வருவதாகவும், கூறியுள்ளது.
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான சிந்தெடிக் & எம்.டி.எம்.ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறிய அவர், போதைப் பொருள் மையமாக தமிழகம் மாறி இருப்பதற்கு திமுக அரசே முக்கிய காரணமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 66 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை 1133 சிக்சர்கள் பதிவாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், இதுவே அதிக சிக்சர்கள் பதிவான சீசன் ஆகும். ▶அதிக சிக்சர்கள் அடித்த அணிகள்: SRH-146, RCB- 141. ▶குறைவான சிக்சர்கள் அடித்த அணிகள்: GT- 67, LSG- 88, ▶அதிக சிக்சர்களை வழங்கிய அணிகள்: DC- 144, RCB- 130, குறைவான சிக்சர்களை வழங்கிய அணிகள்: CSK, RR தலா 86.
சுவாதி மாலிவால் மீதான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை: மவுனம் சாதிப்பது ஏன்? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். மாலிவால் குற்றம்சாட்டிய பிபவ் குமாருடன் அவர் வெளிமாநிலங்களுக்கு செல்கிறார் என விமர்சித்த நிதியமைச்சர், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் அனைவரின் முன்னிலையிலும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்குப் பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் ₹2.35 கோடி – ₹3.53 கோடி வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 7 பயணிகளை அழைத்துச் செல்லவும், 100 மணி நேரத்திற்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதானி துறைமுக நிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்தப் போவதாக நார்வே அரசின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2021இல் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சியின்போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாகக் குற்றம்சாட்டிய நார்வே அரசு, விதிமீறல் நிறுவனங்களின் பட்டியலில் அதானி நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. ஏற்கெனவே வாங்கிய அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்கவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.