India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட விவகாரத்தில், பிபிசிக்கு டெல்லி கோர்ட் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் மீது குஜராத் என்.ஜி.ஓ வழக்கு தொடுத்தது. ஏற்கெனவே அனுப்பிய சம்மன் சென்றடையாத நிலையில், பிரிட்டனில் உள்ள பிபிசி முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டில் நடைபெறுமென அறிவித்துள்ளது.
OLA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, 3 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற ஹேமந்த் பக்ஷி, தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்தது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடகை கார் மற்றும் பைக் டாக்சி சேவையில் முன்னணியில் உள்ள OLA நிறுவனம், தனது ஊழியர்கள் 10% பேரைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
‘என்னைக் கைது செய்ய முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் நான் பயப்பட மாட்டேன்’ எனத் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாகப் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனிடையே, அமித் ஷாவின் போலி வீடியோவை பரப்பியதாக அசாமைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து டெல்லி அணி முதலில் களமிறங்குகிறது. புள்ளிப் பட்டியலில் KKR 2ஆவது இடத்திலும், DC அணி 6ஆவது இடத்திலும் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க டெல்லி அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றி பெறும் என கமெண்டில் கூறுங்கள்.
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், நாளை JD(S) உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு அவர் நீக்கப்படுவார் எனக் கட்சித் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2018இல் பெண்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிஹாரின் பெகுசராயில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரைக்காகப் பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. இதில் நூலிழையில் விபத்தில் இருந்து அவர் தப்பினார். இந்நிலையில், ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பாக, ‘அதுபோன்ற எந்தப் பிரச்னையும் இல்லை’ என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதனிடையே, அமித் ஷா திட்டமிட்டபடி, அசாமின் கவுகாத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
டி20 உலக்கோப்பையில் 3ஆவது இடத்தில் கோலி விளையாட வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார். அவரின் இடத்தை மாற்றினால், 2007இல் 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா அடைந்ததை போல் தோல்வி அடைய நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார். 2007இல் சச்சின், 4ஆவது இடத்தில் ஆடினார். சச்சின் சிறப்பாக ஆடாத நிலையில், இந்தியாவும் அந்தத் தொடரில் சோபிக்கவில்லை. முன்னதாக, கோலி ஒப்பனராக இறங்க உலகக்கோப்பையில் கங்குலி கூறியிருந்தார்.
வேட்பு மனுவை நிராகரித்ததை எதிர்த்து பாஜக வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தேபாசிஷ் தார். இவர் அண்மையில் ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். இவரின் வேட்புமனு முறையாக இல்லை எனக் கூறித் தேர்தல் அதிகாரி அதனை நிராகரித்தார். இந்த வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கரக்பூர் ஐஐடியில் கடந்த ஆண்டு பயின்ற 33% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையென ஆர்.டி.ஐ தகவலில் தெரியவந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த 2,256 பேரில், 1,615 பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் 2022-23ஆம் ஆண்டில் 2,490 பேரில் 1,675 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ஆண்டுச் சராசரி சம்பளம் 2021-22இல் ரூ.16 லட்சமும், 2022-23இல் ரூ.18 லட்சமும் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.