India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய அவர், கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காப்பதாக உணர்ச்சிவயப்பட்டு பேசினார். கங்கை தன்னை வலுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹53,800க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹6,725க்கும் விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ₹35ம், சவரனுக்கு ₹280ம் குறைந்தது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹91,000க்கும் விற்பனையாகிறது.
RCB-க்கு எதிரான போட்டியில் தான் விளையாடி இருந்தால், ப்ளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் என டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், நிறைய நம்பிக்கையுடன் இந்த சீசனில் களமிறங்கினோம் என்றும், வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் நினைத்ததை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும் கூறினார். மேலும், ரசிகர்கள் காட்டிய அன்பு நெகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 50ஆவது படம் என்பதால், இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், தனுஷ் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களையும் அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் பாஜக, 3 தொகுதிகளில் போட்டியிடவில்லை. ஜம்மு – காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் இப்போதுதான் முதல் முறையாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், உதம்பூர், லடாக் பகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கும் பாஜக, காஷ்மீரின் 3 தொகுதிகளில் மட்டும் போட்டியிடவில்லை. இஸ்லாமியர்களின் எதிர்ப்பே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன. இந்நிலையில், இந்த இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் பயன்பாட்டிற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவிலும், ஞானவாபி மசூதி உள்ள வாரணாசியிலும் கோயில் கட்டுவோம் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 300 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தபோதே அயோத்தியில் பாஜக அரசு ராமர் கோயிலை கட்டியதாக பெருமை தெரிவித்தார். மேலும், பாஜக அரசு இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்தும் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கௌதம் மேனனிடம் மம்மூட்டி கதை கேட்டதாகவும், அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில், மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உமாவின் புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் லாவன்யா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் சிறுமியை நாய் கடித்த அதிர்ச்சி தீர்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு என்ன தீர்வு!
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், லக்னோ அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தவறவிடும் அபாயத்தில் உள்ளது. போட்டிக்கு பின் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், இந்த சீசன் முழுவதுமே பவர் பிளேவில் தாங்கள் விக்கெட்டுகளை இழந்து வருவதாகவும், சிறந்த தொடக்கம் அமையாததால் மிடில் ஆர்டரில் ஸ்டாய்னிஸ், பூரன் ஆகியோரால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.