news

News May 15, 2024

கட்சியை மறுசீரமைக்க உதயநிதி தீவிரம்

image

திமுகவை மறுசீரமைக்கும் தீவிர பணிகளில் அமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் இருந்து கோஷ்டி பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல புகார்கள் திமுக தலைமையிடம் வந்து குவிந்தன. இது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்ட அவர், கட்சி & ஆட்சி நிர்வாகத்தில் பெரும் களையெடுப்புகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

News May 15, 2024

சுலோவேகியா நாட்டு பிரதமர் மீது துப்பாக்கி சூடு

image

சுலோவேகியா நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ (59) இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென பிகோவை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மர்மநபரை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 15, 2024

முடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி

image

அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர், ரேபரேலியில் உள்ள உங்களைப் போலவே நாடு முழுவதும் திறமையான பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை காங்கிரஸ் உருவாக்கித் தரும் என உறுதியளித்தார்.

News May 15, 2024

சாகசப் பிரியர்களுக்காக சந்தைக்கு வந்த டுகாட்டி டெசர்ட் X

image

சாகசப் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்காக இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் டுகாட்டி நிறுவனம் டெசர்ட் X என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான 48 மி.மீ. யு.எஸ்.டி. போர்க், ஸ்போக்ஸ் சக்கரங்கள், 937 சி.சி. லிக்விட் கூல்டு என்ஜின், 110 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் இதன் விலை ₹24 லட்சமாகும். இதில் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

News May 15, 2024

வாங்கும் பொருளுக்கு SMS வருகிறதா?

image

ரேஷன் கடைகளில் வாங்கும் பொருள்கள் குறித்த விவரங்கள், மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது. இந்நிலையில், பயனாளர்கள் சிலருக்கு SMS வருவதில்லை என புகார் எழுந்தது. இதற்கு, ஏற்கெனவே பதிவு செய்த மொபைல் எண்ணை மாற்றியிருந்தால் SMS வராது எனக் கூறிய அதிகாரிகள், புதிய எண்ணை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்தால், அதன்பிறகு SMS வரும் எனத் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு SMS வருகிறதா?

News May 15, 2024

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரை RR 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிவருகிறது. ஜெய்ஷ்வால் 4, கொஹலர் 18, சஞ்சு சாம்சன் 18 ரன்கள் எடுத்தனர். PBKS தரப்பில் சாம் கரண், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று RR எவ்வளவு ரன்கள் எடுக்கும் என நினைக்கிறீர்கள்?

News May 15, 2024

பெண் போலீஸ் போன் நம்பரை கேட்டாரா சவுக்கு சங்கர்?

image

பெண் போலீஸ் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விசாரணைக்காக இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, திருமணமாகாத பெண் போலீசிடம் அவர் மொபைல் நம்பரை கேட்டதாக சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News May 15, 2024

பிரியாணி சாப்பிடும்போது இதை செய்யாதீர்கள்!

image

*செரிமான பிரச்னைகளை வராமல் தடுக்க பிரியாணி சாப்பிட்டவுடன் எண்ணெய் அதிகளவு மிதக்கும் பிரெட் அல்வா உள்ளிட்ட இனிப்புகளை சாப்பிடுவதை அறவே தவிருங்கள். *சிக்கன் 65 போன்ற உணவுகளுடன் சேர்த்து குளிர்பானங்களை அருந்தக் கூடாது. *பால், சீஸ் போன்ற கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடக்கூடாது. *ரைத்தாவில் தயிர் சேர்க்கக் கூடாது; நான்குக்கு மூன்று மடங்கு வெங்காயமும், ஒரு பங்கு மோரும் பயன்படுத்த வேண்டும்.

News May 15, 2024

மோடி Vs ராகுல்.. யார் பணக்காரர்?

image

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மோடி, ராகுலின் சொத்து விவரங்கள் சமீபத்தில் வெளியானது. அதில், தனக்கு ₹3.02 கோடி சொத்து இருப்பதாகவும், சொந்தமாகக் கார், வீடு இல்லை என பிரதமர் மோடி கூறியிருந்தார். ராகுல் காந்தி, தனக்கு ₹20 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், கார் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு ₹49.7 லட்சம் கடன் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News May 15, 2024

தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்

image

ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில் புதிய விதியை மத்திய அரசு தயார் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!