News May 15, 2024
கட்சியை மறுசீரமைக்க உதயநிதி தீவிரம்

திமுகவை மறுசீரமைக்கும் தீவிர பணிகளில் அமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் இருந்து கோஷ்டி பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல புகார்கள் திமுக தலைமையிடம் வந்து குவிந்தன. இது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்ட அவர், கட்சி & ஆட்சி நிர்வாகத்தில் பெரும் களையெடுப்புகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 12, 2025
‘ஜனநாயகன்’ படத்தை சன் டிவி வாங்கியதா?

‘ஜனநாயகன்’ படத்தை சன் டிவி வாங்கியதாக காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகின்றன. மேடைகளில் திமுகவை திட்டிவிட்டு, படத்தை மட்டும் அவர்களது டிவிக்கு விஜய் விற்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இது வதந்தி எனவும், அப்படத்தின் சேட்டிலைட் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜீ டிவி, விஜய் டிவி ஆகியவை தான் அப்படத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
News November 12, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *நீங்கள் பந்தயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேன்.
News November 12, 2025
பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக

பிஹாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என NDTV-ன் கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. பாஜக 69, நிதிஷ்குமாரின் JD(U) 62, தேஜஸ்வி யாதவ்வின் RJD 63 இடங்களில் வெற்றி பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் NDA கூட்டணியின் மூத்த அண்ணனாக பாஜக உருவாக உள்ளது. கடந்த தேர்தலில் 75 தொகுதிகளில் வென்று RJD தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.


