news

News May 16, 2024

முகம் சுளிக்க வைக்கும் OTT தொடர்கள்

image

புது படங்கள் உடனுக்குடன் ரிலீஸ் ஆவதாலும், ஹாலிவுட் சிரீஸ்கள் அதிகம் இருப்பதாலும் OTT-க்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதேநேரத்தில் OTT சிரீஸ்களில் வரும் சில காட்சிகள் கொடூரமாகவும், ஆபாசமாகவும் உள்ளன. வசனங்களில் அதிகளவிலான கெட்ட வார்த்தைகள் உள்ளன. இது குடும்பத்துடன் OTT சிரீஸ்களை காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. ஓடிடி நிறுவனங்கள் இதை கவனிக்குமா?

News May 16, 2024

சீதா தேவிக்கு பாஜக மிகப்பெரிய கோயில் கட்டும்

image

ராமரின் மனைவி சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்டக் கோயிலைக் கட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அயோத்தியில் ராமருக்கு கட்டப்பட்டது போல சீதா தேவி பிறந்த ஊரில் அவருக்கு கோயில் கட்ட வேண்டிய பணி இருப்பதாகவும், ராமருக்கு கோயில் கட்டாதவர்கள், சீதாவுக்கு கோயில் கட்ட மாட்டார்கள் என்பதால், அப்பணியை மோடியும், பாஜகவும் செய்யும் என்றார்.

News May 16, 2024

டூ விலரில் பயணம் செய்தால் இந்தப் பிரச்னை வருமா?

image

அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்யும் சில வேலைகள், அவர்களுடைய விந்தணு உற்பத்தியைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக, நீண்ட தூரம் பைக் ஓட்டும் ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள நரம்புகளில் ஏற்படும் (எடை அழுத்தம் காரணமாக) அழுத்தம், ரத்த ஓட்டத்தை குறைத்து, மரத்துப்போக செய்யும். இதனால், நாளடைவில் விந்தணு உற்பத்திக் குறைவதோடு ஆண்மையும் பாதிக்கப்படலாமென எச்சரிக்கின்றனர்.

News May 16, 2024

14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசியில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி சிரமம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News May 16, 2024

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்

image

சீதாவின் பூமியான பிஹாரில் பசுவதை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அமித் ஷா கூறியுள்ளார். பிஹாரில் பசுவதை வழக்குகள் அதிகமாகப் பதிவாவதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் பசுவதை செய்பவர்களை தலைக்கீழாக தொங்கவிடுவோம் என்றார். மேலும், பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்கமாட்டோம் என்பதே மோடியின் உத்தரவாதம் எனவும் அவர் கூறினார்.

News May 16, 2024

கிளாமர் வேடங்களில் நடிக்க தயார்

image

கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர் வேடங்களில் நடிப்பேன் என்று நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். தி புரூப் படத்தில் தற்போது நடிக்கும் அவர், கிளாமர் வேடங்களில், நடிப்பதில் அதிக விருப்பமில்லை என்று கூறினார். தி புரூப் படத்தில் கிளாமராக நடித்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதே நேரத்தில் முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

News May 16, 2024

ஒரே பள்ளியில் படிக்கும் 8 இரட்டையர்கள்

image

ஒரு பள்ளியில் ஒரு இரட்டைக் குழந்தை படித்தாலே பல குழப்பங்கள் ஏற்படும். ஆனால், மிசோரமில் ஒரு பள்ளியில் 8 இரட்டை குழந்தைகள் படிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் LKG முதல் 2ம் வகுப்பு வரை படிக்கின்றனர். பள்ளியில் இவர்களின் சேர்க்கை தற்செயலாக நடந்ததாகக் கூறும் ஆசிரியர்கள், இவர்களால் பலமுறை குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களது புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News May 16, 2024

RCB ரசிகர்களுக்கு கெட்ட செய்தி

image

சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 68ஆவது லீக் போட்டி, வரும் 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அங்கு மழை பெய்வதற்கு 45% வரை வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழையினால் போட்டி ரத்தானால் RCB அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். அதே சமயம் CSK அணி நேரடியாக ப்ளே ஆஃப் தகுதி பெறும். போட்டி நடக்குமா? ரத்தாகுமா?

News May 16, 2024

சீன ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பரிந்துரை

image

சீன இறக்குமதி மீதான வரியை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளதால், இருநாட்டு நட்புறவு மோசமடைந்துள்ளது. இந்நிலையில், சீனாவை தளமாகக் கொண்ட தனது பல நூறு ஊழியர்களை அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் மாற பரிசீலிக்குமாறு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது சர்வதேச வர்த்தக மேலாண்மை நடைமுறையின் ஒருபகுதியே என்றும் மைக்ரோசாஃப்ட் விளக்கம் அளித்துள்ளது.

News May 16, 2024

ஆயுளைக் குறைக்கும் புது கலாச்சாரம்

image

நள்ளிரவில் துரித உணவு சாப்பிடும் வழக்கம் இளைஞர்கள் மத்தியில், புது கலாச்சாரமாகவே மாறி வருகிறது. குறிப்பாக, இரவு 1 மணி வரை திறந்திருக்கும் உணவகங்களில் பீட்சா, நூடுல்ஸ், மோமோஸ், சிக்கன் ஃப்ரை ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆனால், இதுபோன்று இரவு மற்றும் விடியற்காலை சாப்பிடும் உணவு செரிமான கோளாறு மட்டுமின்றி ஆயுட்காலத்தையும் குறைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!