News May 16, 2024
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசியில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி சிரமம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News July 9, 2025
பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்!

➤நாடு தழுவிய <<17000804>>ஸ்ட்ரைக்<<>>.. தமிழகத்தில் 80% அரசு பஸ் இயக்கம்
➤ <<17003074>>நமீபியாவில் <<>>சுற்றுப்பயணம்: மேள தாளம் வாசித்த PM மோடி
➤<<17001915>>குஜராத்தில் <<>>உடைந்து விழுந்த பாலம்… 6 பேர் மரணம்
➤<<17001872>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹480 குறைந்தது
➤<<17000262>>ஊக்கமருந்து <<>>பயன்பாடு: Ex. உலகசாம்பியனுக்கு ஒரு வருடம் தடை ➤<<17001168>>சட்டவிரோத <<>>பணப்பரிமாற்றம்.. நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு
News July 9, 2025
ராஜூவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா!

சில காலமாகவே சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்க சென்ற சமந்தா, நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட போட்டோக்களில் ராஜை இறுக்கமாக பிடித்தபடி, சமந்தா இருக்கும் போட்டோ தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ளது. ஒருவேளை வெளிவரும் செய்திகளில் உண்மை இருக்குமோ என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.
News July 9, 2025
காமராஜர் பிறந்தநாளில் விஜய்யின் அடுத்த நகர்வு

1 கோடி உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மறைந்த Ex CM காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ‘My TVK’ என்ற செயலியையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. வேகமெடுக்கிறதா தவெக?