news

News May 16, 2024

3-7 நாள்களில் மின் இணைப்பு வழங்க உத்தரவு

image

புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தால், 3-7 நாள்களில் இணைப்பு வழங்க தலைமை பொறியாளர்களுக்கு, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என தாமதப்படுத்தாமல், 3 நாள்களில் பயனாளர்களுக்கு விவரத்தை தெரிவிக்கவும், 7 நாள்களில் மின் இணைப்பு வழங்கவும் அறிவுறுத்திய மின்சார வாரியம், தவறினால் நாளொன்றுக்கு ₹100 அபராதம் செலுத்த நேரிடும் எனத் தலைமைப் பொறியாளரை எச்சரித்துள்ளது.

News May 16, 2024

இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை (1/2)

image

இந்தியர்களுக்கு உண்டாகும் நோய்களில் சுமார் 56.4% நோய்கள் தவறான உணவு முறைகளினாலேயே ஏற்படுவதாக ICMR தெரிவித்துள்ளது. 148 பக்கங்கள் கொண்ட அதன் வழிகாட்டுதலில் கூறிய முக்கியமான அறிவுறுத்தல்களைப் பார்ப்போம். *கொழுப்பு அமிலங்களுக்கு நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். *சரிவிகித உணவுமுறையை பின்பற்றுங்கள் *நாளொன்றுக்கு 25 கிராம் சர்க்கரை மட்டும் உட்கொள்ளுங்கள். *ஊட்டச்சத்துக்கு கடல் உணவுகளை சாப்பிடுங்கள்.

News May 16, 2024

ஓய்வு எப்போது? கோலி பேட்டி

image

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பது குறித்து கோலி பேட்டியளித்துள்ளார். தன்னால் முடிந்த வரை கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும், அதன் பிறகே ஓய்வு பெற விரும்புவதாகவும் கூறிய கோலி, எதையும் செய்ய முடியவில்லை என்று பிறகு நினைத்து வருத்தப்பட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுக்கு பிறகு தன்னை யாரும் குறிப்பிட்ட காலம் காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

News May 16, 2024

நிலவில் ரயில்கள் எப்படி ஓடும்?

image

நிலவில் ரயில் நிலையம் அமைக்க ‘Flexible Levitation Track’ என்ற சிறப்பு அமைப்பை நாசா உருவாக்கி வருகிறது. நிலவின் புவி விசையில் ரயிலை இயக்கும் மேக்னடிக் லெவிடேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். நிலவில் தூசி & காற்று மாசு அதிகமாக இருப்பதால் ரயில் பாதையில் முதலில் வினாடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் பயணிக்கும் மிதக்கும் ரோபோக்களை வைத்து, சோதனை செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

News May 16, 2024

மழைக்காலத்தில் இதை செய்யாதீர்கள்

image

கோடை மழை தொடங்கியுள்ள நிலையில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மின்வாரியம் (TANGEDCO) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சாலையில் மின்கம்பிகள் அறுந்துகிடந்தால் அதனைத் தொடக்கூடாது என்றும், உடனே 94987 94987 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கவும் பரிந்துரைத்துள்ளது. மே 20 வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 16, 2024

முகம் சுளிக்க வைக்கும் OTT தொடர்கள்

image

புது படங்கள் உடனுக்குடன் ரிலீஸ் ஆவதாலும், ஹாலிவுட் சிரீஸ்கள் அதிகம் இருப்பதாலும் OTT-க்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதேநேரத்தில் OTT சிரீஸ்களில் வரும் சில காட்சிகள் கொடூரமாகவும், ஆபாசமாகவும் உள்ளன. வசனங்களில் அதிகளவிலான கெட்ட வார்த்தைகள் உள்ளன. இது குடும்பத்துடன் OTT சிரீஸ்களை காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. ஓடிடி நிறுவனங்கள் இதை கவனிக்குமா?

News May 16, 2024

சீதா தேவிக்கு பாஜக மிகப்பெரிய கோயில் கட்டும்

image

ராமரின் மனைவி சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்டக் கோயிலைக் கட்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அயோத்தியில் ராமருக்கு கட்டப்பட்டது போல சீதா தேவி பிறந்த ஊரில் அவருக்கு கோயில் கட்ட வேண்டிய பணி இருப்பதாகவும், ராமருக்கு கோயில் கட்டாதவர்கள், சீதாவுக்கு கோயில் கட்ட மாட்டார்கள் என்பதால், அப்பணியை மோடியும், பாஜகவும் செய்யும் என்றார்.

News May 16, 2024

டூ விலரில் பயணம் செய்தால் இந்தப் பிரச்னை வருமா?

image

அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்யும் சில வேலைகள், அவர்களுடைய விந்தணு உற்பத்தியைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக, நீண்ட தூரம் பைக் ஓட்டும் ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள நரம்புகளில் ஏற்படும் (எடை அழுத்தம் காரணமாக) அழுத்தம், ரத்த ஓட்டத்தை குறைத்து, மரத்துப்போக செய்யும். இதனால், நாளடைவில் விந்தணு உற்பத்திக் குறைவதோடு ஆண்மையும் பாதிக்கப்படலாமென எச்சரிக்கின்றனர்.

News May 16, 2024

14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசியில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி சிரமம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News May 16, 2024

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்

image

சீதாவின் பூமியான பிஹாரில் பசுவதை செய்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அமித் ஷா கூறியுள்ளார். பிஹாரில் பசுவதை வழக்குகள் அதிகமாகப் பதிவாவதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் பசுவதை செய்பவர்களை தலைக்கீழாக தொங்கவிடுவோம் என்றார். மேலும், பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்கமாட்டோம் என்பதே மோடியின் உத்தரவாதம் எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!