news

News May 16, 2024

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

image

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கைதாகி வருவது தற்போது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், நாகை கோடியக்கரை அருகே, இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்த கடலோர காவல்படையினர், அவர்கள் அனைவரையும் கடலோர காவல் குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

News May 16, 2024

அதிகாரிகளுக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை!

image

காவிரி ஆணையக் கூட்டத்தில் நேரில் பங்கேற்க அதிகாரிகளுக்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதிகாரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே டெல்லி கூட்டத்தில் பங்கேற்க திமுக அரசு அனுமதி அளித்துள்ளதாக இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த தமிழக அரசு, அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ள தேவையான அனுமதியை அரசு உடனுக்குடன் அளிக்கிறது” எனக் கூறியுள்ளது.

News May 16, 2024

தோனி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார்

image

ஐபிஎல்லில் தோனி மேலும் 2 ஆண்டு விளையாடுவார் என சிஎஸ்கே முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். தோனி தற்போதும் நன்றாக பேட்டிங் செய்வதாகவும், ஓய்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க மாட்டார் என நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தோனி அனைத்தையும் தன் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார், வெளியில் சொல்ல மாட்டார் என்ற ஹஸ்ஸி, அவரது முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

News May 16, 2024

தமிழக உரிமைகளை அடமானம் வைக்கும் திமுக: இபிஎஸ்

image

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக அரசின் கால்களில் திமுக அரசு அடமானம் வைத்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களில் ஆன்லைனில் பங்கேற்க தமிழக அரசு முடிவு எடுத்தது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் நேரில் தான் பங்கேற்றாக வேண்டும்” என வலியுறுத்தினார்.

News May 16, 2024

கட்டுக் கதைகள் வேதனை தருகிறது: சைந்தவி

image

நானும் G.V.பிரகாஷும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே விவாகரத்து செய்கிறோம் என பாடகி சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது இந்த முடிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் கட்டுக் கதைகள் வேதனை தருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், யூகங்கள் மூலம் ஒருவரின் குணாதிசயத்தை சிதைப்பதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார். G.V.பிரகாஷ்-சைந்தவி தம்பதி பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

News May 16, 2024

புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு வைகோ கண்டனம்

image

உண்மைக்கு மாறான பல செய்திகளை இட்டுக்கட்டி விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த பாஜக அரசு கவலைப்படவில்லை. சிங்கள இனவெறி அரசை திருப்திப்படுத்த புலிகள் மீதான தடையை நீட்டித்திருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

News May 16, 2024

இந்திய அணி பயிற்சியாளராக விரும்பாத லக்ஷ்மன்?

image

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக தற்போது பதவி வகிக்கும் டிராவிட்டுக்கு பதில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனால் அவருக்கு அடுத்து யார் அந்த பதவிக்கு வருவார்கள் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரான விவிஎஸ் லட்சுமண் பெயரும் அடிபட்டது. ஆனால், அதை லக்ஷ்மன் விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

News May 16, 2024

41 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

image

41 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) தெரிவித்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில், சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் பிரச்னை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாகவும், இந்தத் தகவலை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு மருந்து நிறுவனங்கள் தெரியப்படுத்தவும், NPPA உத்தரவிட்டுள்ளது.

News May 16, 2024

ரசிகர்களுக்கு CSK அணி கொடுக்கும் பரிசு

image

RR அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ரசிகர்களுக்கு, தோனி கையெழுத்திட்ட பந்தை பரிசாக வழங்கியது CSK அணி. தற்போது ரசிகர்களுக்கு மேலும் ஒரு கிஃப்ட் வழங்க உள்ளதாக CSK அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்தால், ரசிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு CSK வீரர்களின் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் பரிசளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. <>TRY IT<<>>

News May 16, 2024

அதிக லாபம் ஈட்ட SIP செய்யலாம்!

image

அதிக லாபம் ஈட்ட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) தேர்வு செய்யலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். Stepup SIP எனப்படும் இந்த முறையில் மாதத்திற்கு ₹5,400 என்ற விகிதத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ₹49.67 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதை ஆண்டுக்கு 5% உயர்த்தினால் ₹69 லட்சமும், 15%க்கு ₹1.54 கோடியும் கிடைக்கும் என கூறுகின்றனர்.

error: Content is protected !!