News May 16, 2024
கட்டுக் கதைகள் வேதனை தருகிறது: சைந்தவி

நானும் G.V.பிரகாஷும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே விவாகரத்து செய்கிறோம் என பாடகி சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது இந்த முடிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் கட்டுக் கதைகள் வேதனை தருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், யூகங்கள் மூலம் ஒருவரின் குணாதிசயத்தை சிதைப்பதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார். G.V.பிரகாஷ்-சைந்தவி தம்பதி பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
Similar News
News November 17, 2025
காப்பிரைட் பற்றி சிந்திப்பதில்லை: தேவா

தற்போது நிறைய பேர், தங்கள் பாடல்கள் பிற படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு காப்பிரைட் கேட்கின்றனர், ஆனால் அதை பற்றி தான் சிந்திப்பதே இல்லை என்று தேவா கூறியுள்ளார். பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கின்றனர் என்பதற்காக, தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் நன்றாக இசையமைக்கவில்லை என கூறிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது பாடல்கள் ரசிக்கப்படுவதையும் கூறி நெகிழ்ந்தார்.
News November 17, 2025
₹10,000 லஞ்சம் கொடுத்து வென்ற BJP: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தலில் காங்., தோல்வி அடையவில்லை, ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பிஹாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு தலா ₹10,000 கொடுத்து பாஜக வென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக மக்களின் GST பணத்தை பாஜக பிஹாரில் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரும் 15-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு, 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


