India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
4 கைகள், 3 கால்களுடன் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகளின் ஒரு கால் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேசின் சமீபத்திய அறிக்கைப்படி, 2018இல் இந்தோனேசியாவில் இந்த குழந்தைகள் பிறந்தன. 20 லட்சம் பேரில் ஒரு குழந்தை இவ்வாறு பிறப்பதாகக் கூறப்படுகிறது. உயிருக்கு போராடி வந்த இந்த குழந்தையின் ஒரு கால் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், அவர்களால் உட்கார முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் அதற்கான காரணம் கூற INDIA கூட்டணித் தலைவர்கள் பலி ஆட்டைத் தேடுவார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுக்குப் பின் INDIA கூட்டணி சுக்குநூறாக உடையும் என்றார். மேலும், அரண்மனையில் பிறந்த வாரிசுகள் கடினமாக உழைக்க மாட்டார்கள் என ராகுல், அகிலேஷை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் SRH அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “SRH அணி அடுத்த 2 போட்டிகளில், தோற்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். KKR, CSK, RCB, RR ஆகிய 4 அணிகள் ப்ளே ஆஃப்க்கு முன்னேறலாம்” என்றார். இந்த சர்ச்சைக் கருத்தால் சீற்றமடைந்த SRH அணியின் ரசிகர்கள் கடும் சொற்களால் அவரை அர்ச்சித்து வருகின்றனர்.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கைதாகி வருவது தற்போது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், நாகை கோடியக்கரை அருகே, இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்த கடலோர காவல்படையினர், அவர்கள் அனைவரையும் கடலோர காவல் குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
காவிரி ஆணையக் கூட்டத்தில் நேரில் பங்கேற்க அதிகாரிகளுக்கு அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதிகாரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே டெல்லி கூட்டத்தில் பங்கேற்க திமுக அரசு அனுமதி அளித்துள்ளதாக இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த தமிழக அரசு, அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ள தேவையான அனுமதியை அரசு உடனுக்குடன் அளிக்கிறது” எனக் கூறியுள்ளது.
ஐபிஎல்லில் தோனி மேலும் 2 ஆண்டு விளையாடுவார் என சிஎஸ்கே முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். தோனி தற்போதும் நன்றாக பேட்டிங் செய்வதாகவும், ஓய்வு குறித்து உடனடியாக முடிவெடுக்க மாட்டார் என நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தோனி அனைத்தையும் தன் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார், வெளியில் சொல்ல மாட்டார் என்ற ஹஸ்ஸி, அவரது முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக அரசின் கால்களில் திமுக அரசு அடமானம் வைத்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களில் ஆன்லைனில் பங்கேற்க தமிழக அரசு முடிவு எடுத்தது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் நேரில் தான் பங்கேற்றாக வேண்டும்” என வலியுறுத்தினார்.
நானும் G.V.பிரகாஷும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே விவாகரத்து செய்கிறோம் என பாடகி சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது இந்த முடிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் கட்டுக் கதைகள் வேதனை தருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், யூகங்கள் மூலம் ஒருவரின் குணாதிசயத்தை சிதைப்பதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார். G.V.பிரகாஷ்-சைந்தவி தம்பதி பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
உண்மைக்கு மாறான பல செய்திகளை இட்டுக்கட்டி விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த பாஜக அரசு கவலைப்படவில்லை. சிங்கள இனவெறி அரசை திருப்திப்படுத்த புலிகள் மீதான தடையை நீட்டித்திருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக தற்போது பதவி வகிக்கும் டிராவிட்டுக்கு பதில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனால் அவருக்கு அடுத்து யார் அந்த பதவிக்கு வருவார்கள் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரான விவிஎஸ் லட்சுமண் பெயரும் அடிபட்டது. ஆனால், அதை லக்ஷ்மன் விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
Sorry, no posts matched your criteria.