news

News May 17, 2024

‘கங்குவா’ படத்தில் 10,000 பேர் பங்கேற்ற போர் காட்சி

image

‘கங்குவா’ படத்தில், மிகப்பெரிய போர் காட்சி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட 10,000 பேர் நடித்துள்ள அந்தப் போர் காட்சிகள், ரசிகர்களை மிகவும் கவரும் என்றும், 2024ஆம் ஆண்டு வெளியாகும் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘கங்குவா’ இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

News May 17, 2024

மைதானங்களின் எல்லையை நீட்டிக்க வேண்டும்

image

இந்தியாவில் இருக்கும் அனைத்து மைதானங்களிலும் பவுண்டரி எல்லையை நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு, பந்து ஸ்விங் ஆவது நின்று விடுகிறது. பேட்டுக்கும், பந்துக்கும் நடுவில் சம நிலையான போட்டி தேவைப்படுகிறது. பந்துவீச்சாளர்களை பாதுகாக்க பிசிசிஐ சில மாற்றங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

News May 17, 2024

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும்

image

தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 21ஆம் தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதி, கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதி, இலங்கை கடலோரப்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளது.

News May 17, 2024

காலநிலை மாற்றம் மூளையைப் பாதிக்கும்

image

காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும், அடிக்கடியும் நிகழும்போது, நரம்பியல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. வெப்ப அலைகளின் போது பக்கவாதம், மனநலப் பிரச்னை தொடர்பான சேர்க்கை மருத்துவமனைகளில் அதிகரிப்பதோடு, இறப்பு விகிதம் அதிகரிப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

News May 17, 2024

விஸ்வரூபம் எடுக்கும் ஸ்வாதி மாலிவால் விவகாரம்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார், ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி முதல்வருக்கு இதில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் காவல்துறை, மகளிர் ஆணையம் இணைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 17, 2024

என் கேப்டன்சி மிகவும் எளிமையானது: ஹர்திக்

image

வெற்றி, தோல்வி முடிவுகளை பார்க்கக் கூடிய கேப்டன் நான் கிடையாது என MI கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு முன் பேசிய அவர், தனது கேப்டன்சி மிகவும் எளிமையானது என்றும், நம்பிக்கையையும், அன்பையும் கொடுத்தால் வீரர்கள் 100% உழைப்பைக் கொடுப்பார்கள் என்றும் கூறினார். மேலும், வீரர்கள் என்ன மாதிரியான அணுகு முறையை காட்டுகிறார்கள் என்று கவனிப்பதாகவும் குறிப்பிட்டார்.

News May 17, 2024

5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு

image

தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News May 17, 2024

வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியும் AI

image

யானை உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில், அவற்றின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்ட AI சோதனை கேரளாவில் வெற்றி பெற்றுள்ளது. நிலத்தில் புதைக்கப்பட்ட கருவி, நில அதிர்வு மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை கண்டறியும் முதல்கட்ட சோதனை பாலக்காட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

ராமர் கோயில் புல்டோசரால் இடிக்கப்படலாம்: மோடி

image

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயில் புல்டோசரால் இடிக்கப்படலாம் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரபங்கி பரப்புரைக் கூட்டத்தில பேசிய அவர், “சமாஜ்வாதியும், காங்கிரஸும் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். நாட்டை விட குடும்பம், பதவி, அதிகாரம் தான் அவர்களுக்கு முக்கியம். அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ராமர் மீண்டும் கூடாரத்திற்கு சொல்வார்” என்றார்.

News May 17, 2024

இந்திய இளைஞர்கள் 20 மடங்கு புத்திசாலிகள்

image

இந்திய இளைஞர்கள் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெருமிதமாகப் பேசியுள்ளார். மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அவர், “இன்றைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். எனது காலத்தில் இருந்ததைவிட தற்போதைய இளைஞர்கள் 10-20 மடங்கு திறமை கொண்டுள்ளனர். அவர்களுக்கு உள்ள இடையூறுகளை நீக்கி, அவர்களது முழுத் திறனையும் வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்றார்.

error: Content is protected !!