News May 17, 2024
என் கேப்டன்சி மிகவும் எளிமையானது: ஹர்திக்

வெற்றி, தோல்வி முடிவுகளை பார்க்கக் கூடிய கேப்டன் நான் கிடையாது என MI கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். லக்னோவுக்கு எதிரான போட்டிக்கு முன் பேசிய அவர், தனது கேப்டன்சி மிகவும் எளிமையானது என்றும், நம்பிக்கையையும், அன்பையும் கொடுத்தால் வீரர்கள் 100% உழைப்பைக் கொடுப்பார்கள் என்றும் கூறினார். மேலும், வீரர்கள் என்ன மாதிரியான அணுகு முறையை காட்டுகிறார்கள் என்று கவனிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News February 10, 2026
மீண்டும் கைவிடப்பட்ட இஷான் கிஷன்

2025-26ஆம் ஆண்டுக்கான BCCI-யின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை. 2023-24 சீசனுக்கான ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். தற்போது, ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் சேர்த்த BCCI, இஷான் கிஷனை இணைக்கவில்லை. இதனையடுத்து, சிறப்பாக விளையாடும் அவரை மீண்டும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
News February 10, 2026
டிவி சேனலை தொடங்கும் சீமான்

தமிழகத்திலுள்ள திமுக (கலைஞர்), அதிமுக (நியூஸ் J), விசிக (வெளிச்சம்) என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக செய்தி சேனல்கள் வைத்திருக்கின்றன. இதன்மூலம் தேர்தல் பரப்புரை மற்றும் தங்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும். அதுபோலதான் தற்போது, ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் வலை தொலைக்காட்சியை பிப்.14-ம் தேதி சீமான் தொடங்கி வைக்கிறார். இது TV சேனலாக உருவெடுக்கிறது.
News February 10, 2026
EPS கோரிக்கையால் மோடி ராஜதந்திரம்

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.


