India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
* டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா – வங்கதேசம் மோதல்.
* 57 தொகுதிகளுக்கு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
* சிறார் வாகனம் ஓட்டினால் ₹25,000 அபராதம் என்ற விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
* இன்று டெல்லியில் நடைபெறும் INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.
பாஜக தலைவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 77 நாள்களில் 117 புகார்களை, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மோடி 14, அமித் ஷா 3, யோகி ஆதித்யநாத் 8 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஒன்றில் கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 47 விக்கெட்டுகளை (35 ஆட்டங்கள்) கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள நிலையில், 2024 உலகக் கோப்பையிலும் விளையாட உள்ளார். 2ஆவது இடத்தில் பாகிஸ்தானின் அப்ரிடி (39), 3ஆம் இடத்தில் இலங்கையின் மலிங்கா (38) உள்ளனர். இந்தியாவின் அஸ்வின் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை, 57 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி (வாரணாசி), அனுராக் தாகூர், நடிகை கங்கனா ரனாவத், லாலு மகள் மிசா பாரதி, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். அதைத் தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகிறது. உடனுக்குடன் தகவலறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
*மேஷம் – முயற்சி செய்ய வேண்டிய நாள்
*ரிஷபம் – இன்பம் தேடி வரும்
*மிதுனம் – புகழ் உண்டாகும்
*கடகம் – செலவு அதிகரிக்கும்
*சிம்மம் – சுகமான நாள்
*கன்னி – வெற்றி கிடைக்கும்
*துலாம் – உறுதியான நாள்
*விருச்சிகம் – ஈகை உண்டாகும்
*தனுசு – பிறருக்கு உதவும் நாள்
*மகரம் – பகை உண்டாகும் *கும்பம் – சாந்தம் ஏற்படும் *மீனம் – அன்பு அதிகரிக்கும்
மோடி தன்னையே கடவுளாக பரப்புரை செய்து வருவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். மோடி, ராமரை இத்தனை வருடங்களாக கடவுளாக கும்பிட்டு வந்ததாக தெரிவித்த அவர், தற்போது பிரதமர் தன்னைத்தானே கடவுளாக கூறி வருவதாக விமர்சித்தார். இப்படி ஒரு தரம் தாழ்ந்த பரப்புரையை, இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் செய்யவில்லை என்றும், இதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக, நயன்- விக்கி தம்பதி தங்கள் குழந்தைகளுடன் ஹாங்காங்கிற்கு சென்றுள்ளனர். இன்று, ஹாங்காங்கில் பிரபலம் வாய்ந்த டிஸ்னி லேண்டிற்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது குடும்பத்திற்காக இருவரும் நேரம் ஒதுக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், தி.மலை., திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூரில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்தில், உள்துறை செயலாளர் மீது முதல்வர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக சஸ்பெண்ட் செய்ததாகவும், இது தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை
என்றும் கூறப்படுகிறது. இதனிடையே முதல்வரின் ஆணையின் படி, இந்த சஸ்பெண்ட் உத்தரவு இன்று மாலை, அமுதாவால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்களை இலங்கை அணி (260 ரன்கள்) எடுத்துள்ளது. கென்யாவுக்கு எதிராக அந்த அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை நீண்ட நாள்களாக முறியடிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் குறைந்தபட்ச ரன்களை நெதர்லாந்து அணி (39 ரன்கள்) இலங்கைக்கு எதிராக எடுத்தது. இந்திய அணி அதிகபட்சமாக 218 ரன் எடுத்து அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.