India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிவி சேனல்களில் நாடக நடிகர்கள், தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் என கலக்கிய பலர், சினிமாவிலும் சாதித்துள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? *விவேக் *விஜய் சேதுபதி * மாதவன் *பிரகாஷ் ராஜ் *சமுத்திரக்கனி *நெல்சன் திலிப்குமார் *நயன்தாரா *சிவகார்த்திகேயன் *அட்டக்கத்தி தினேஷ் *சந்தானம் * கவின் *ஐஸ்வர்யா ராஜேஷ் *சாய் பல்லவி *பிரியா பவானி சங்கர் *வாணி போஜன் *மா.கா.பா. ஆனந்த் *சூரி *ரியோ ஆகியோர் ஆவர்.
நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைத்து விட்டதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களை சாதி, மத ரீதியில் பாஜக மோத விடுவதாகக் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சியில் வினாத்தாள் கசிவு, பழங்குடியினருக்கு எதிராக அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சாடினார்.
ஹீரோ நிறுவனம் கடந்த மே மாதம் 4,71,186 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 3.71% குறைவாகும். கடந்த மே மாதத்தில் ஸ்கூட்டர்கள் 26,937 விற்றுள்ளது. இது கடந்தாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 10.6% குறைவாகும். அதேநேரத்தில் 18,673 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 67.24% அதிகமாகும்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 5ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது RMC.
ரயில்வே விதியில் குறிப்பிட்ட சிலர் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரென தெரியுமா? 5 வயதுக்குட்பட்ட சிறார்கள் டிக்கெட் இன்றி அனைத்து வகுப்புகளிலும் உறவினர்களுடன் பயணிக்கலாம். புற்றுநோயாளிகள், உதவியாளர் ஆகியோர் 2ம் வகுப்பு படுக்கை, ஏசி 3ஆம் வகுப்பு பெட்டியில் இலவசமாகப் பயணிக்கலாம். பிற ஏசி வகுப்பு பெட்டிகளில் 75% கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மாநிலங்களவை குழுத் தலைவராக உள்ள பியூஷ் கோயலுக்கு பதிலாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நாட்டா தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் பியூஷ் கோயல் போட்டியிட்டுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அவருக்கு சாதகமாக உள்ளன. இதனால், அவரது மாநிலங்களவைத் தலைவர் பதவி நட்டாவுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான TATA Motors தயாரிப்பு கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மே மாதம் 74,973 கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 2% அதிகரித்து 76,766ஆக உயர்ந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 28,989இல் இருந்து 29,691ஆகவும், பயணிகள் வாகன விற்பனை 45,984லிருந்து 47,075ஆகவும் அதிகரித்துள்ளது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 2இல் துணைத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3 ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளாதாரம், ஜூலை 5- கணினி, ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல் ஜூலை 9- வேதியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
கனடாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில், அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 4 Four, 10 Six என விளாசி 94*(40) ரன்கள் குவித்தார். இதனால், டி20 உலகக் கோப்பையில் சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்த Non-Opening பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா வீரர் கெம்ப் அடித்த 89 ரன்களே அதிகபட்சமாகும்.
Sorry, no posts matched your criteria.