News June 3, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
’₹8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்’

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்., இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் PM மோடி தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ₹8,000 கோடிக்கு சுற்றுப்பயணம் செய்து, எந்த நாட்டின் ஆதரவை பெற்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.
News July 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.
News July 8, 2025
IND விளையாடிய மைதானத்தை கலாய்த்த கம்மின்ஸ்

IND VS ENG 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஸ்பால் என சொல்லி ஆடுகளத்தை பிளாட்டாக்குவதாக இங்கி., கிரிக்கெட் போர்டை பலர் விமர்சித்து வருகின்றனர். தற்போது இப்போட்டியை பற்றி பேசிய கம்மின்ஸ், இதுபோன்ற மைதானத்தில் யார் பந்துவீச்சாளராக விரும்புவார்கள்? என நக்கலடித்துள்ளார். இங்கி., உள்ள மிக மோசமான 3-வது பிளாட் பிட்ச் என எட்ஜ்பேஸ்டன் மைதானத்தை விமர்சித்துள்ளார்.