India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் பதவிக்கு மோடியின் பெயரை பிஹார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் முன்மொழிந்துள்ளார். பிஹாரில் நிலுவையில் உள்ள பணிகளை முடித்துத் தர வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சிகளால் 2029இல் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார். NDA கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படவில்லை என்று தெளிவுப்படுத்தி அவர், மோடியின் தலைமையில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவர்களின் பரப்புரையால்தான் ஆந்திராவில் வெற்றி சாத்தியமானது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். NDA கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் பேசிய அவர், “உலக அரங்கில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி, உலகளவில் நாட்டின் பொருளாதாரத்தை 5ஆவது இடத்திற்கு உயர்த்தியவர் மோடி. சரியான நேரத்தில் மோடி என்ற மிகக் சரியான தலைவரை இந்தியா பெற்றுள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலய அரங்கில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
புதிதாக அமையவிருக்கும் மோடி 3.0 அமைச்சரவையில் ரயில்வே அமைச்சகத்தை ஐக்கிய ஜனதாதளத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நிர்பந்திக்கிறார். இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் எம்பி லவ்லி ஆனந்த், “ரயில்வே அமைச்சகம் எப்போதுமே ஐக்கிய ஜனதா தளத்துக்குதான் வழங்கப்படும். இந்த முறையும் கேட்டிருக்கிறோம்” என்றார். ஆனால், நிதி, ரயில்வே போன்ற முக்கிய அமைச்சகங்களை தன்வசம் வைத்துக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான தங்களின் கொள்கை, நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். நீட், பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை, கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை, சமூகநீதிக்கு எதிரானவை, நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளும் பிரதமராக மோடியே நாட்டை வழிநடத்துவார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விருப்பம் மட்டுமல்ல 140 கோடி மக்களின் விருப்பமும் அதுதான் என்றார்.
ஜூன் 2ஆம் தேதி 23,000 புள்ளிகளை கடந்த இந்திய பங்குச்சந்தை நிஃப்டி, வாக்கு எண்ணும் நாளன்று கடும் சரிவை சந்தித்தது. சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி குறியீட்டு எண் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், மீண்டும் மோடி பிரதமராவது உறுதியானதால் இன்று நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து 23,202 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரி, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 24.37% பங்குகளை வைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பங்குச் சந்தைகள் உயர்வு அடைந்து வருவதால், அந்நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்ந்தன. இதனால் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கடந்த 5 நாள்களில் 579 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.