news

News June 17, 2024

இதை செய்ய போக்குவரத்து போலீஸ்க்கு அதிகாரமில்லை

image

சோதனையின்போது பைக், கார் சாவியை படக்கென்று போக்குவரத்து போலீசார் எடுப்பதைப் பார்த்திருப்போம். இதற்கு சட்டத்தில் அனுமதியுள்ளதா என்று பார்த்தால், நிச்சயம் இல்லை எனலாம். அபராதம் விதிக்கவே மோட்டார் வாகனச் சட்டத்தின் 129ஆவது பிரிவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பைக், கார் சாவியை போலீஸ் எடுக்கும்பட்சத்தில், அவர்கள் மீது சட்டரீதியில் வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

News June 17, 2024

தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹15 குறைந்து ₹6,690க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹53,640க்கு விற்பனையான நிலையில் இன்று ₹120 குறைந்து ₹53,520க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹95.60க்கு விற்பனையாகிறது.

News June 17, 2024

கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த 5 வீரர்கள்

image

இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 4,076 பவுண்டரிகள் விளாசி, அதிக பவுண்டரி அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 3,015 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆஸி முன்னாள் வீரர் பாண்டிங் (2,781 பவுண்டரி), இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே (2,679 பவுண்டரி), இந்திய அணி வீரர் கோலி (2,647 பவுண்டரி) ஆகியோர் 3 முதல் 5 வரையிலான இடங்களை வகிக்கின்றனர்.

News June 17, 2024

துணை சபாநாயகர் ரேஸில் டி.ஆர்.பாலு?

image

மக்களவைத் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பதால், அந்த பதவியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவையின் மூத்த உறுப்பினர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதால், 7ஆவது முறையாக எம்பிக்களாக இருக்கும் திமுகவின் டி.ஆர்.பாலு, கேரள காங்கிரஸ் எம்.பி தலைவர் சுரேஷ்க்கு அந்த வாய்ப்பு உள்ளது. டி.ஆர்.பாலு மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 17, 2024

ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

image

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் விரைவு ரயிலின் கடைசி 3 பெட்டிகள் சீர்குலைந்தன. தொடர்ந்து, மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்துள்ளனர். இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

News June 17, 2024

செல்போன் எண்கள் 9,8,7,6 என தொடங்குவது ஏன்?

image

இந்தியாவில் உள்ள 10 இலக்க செல்போன் எண்கள் 9,8,7,6 என்று தொடங்குவதைப் பார்த்திருப்போம். 0,1,2,3,4,5, என ஆரம்பிக்காமல், அவை ஏன் 9,8,7,6 என ஆரம்பிக்கிறது என கேள்வி எழலாம். அதற்கான பதிலைத் தெரிந்து கொள்வோம். 0 என்ற எண் எஸ்டிடி கோடுகளுக்கும், 1 எண் அரசு சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. 2,3,4,5 எண்கள் தரைவழி தொலைபேசிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் செல்போன் எண் 9,8,7,6 எனத் தொடங்குகின்றன.

News June 17, 2024

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரானார் சீனிவாச ராவ்

image

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சீனிவாச ராவ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜூவாகா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவர், விசாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியின் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதுவரை கட்சித் தலைவராக இருந்து வந்த ஆந்திர அமைச்சர் அட்சயநாயுடு அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அட்சயநாயுடு 5 முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 17, 2024

Youtube தளத்தில் சேனல் தொடங்குவது எப்படி? (2/2)

image

ஜிமெயில் கணக்கு இல்லாதோர், புதிதாக அதை உருவாக்கிக் கொண்டு Youtube.com தளத்துக்குள் செல்ல வேண்டும். அப்படி சென்றால் செட்டிங்ஸ்சில் மேல்பக்கம் உங்களது கணக்கின்கீழ் “Create a channel” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால், சேனல் உருவாகி விடும். அதன்பிறகு சேனலுக்கு பிரத்யேக பெயர், லோகோ வைத்து வீடியோக்களை பகிர்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும்.

News June 17, 2024

Youtube தளத்தில் சேனல் தொடங்குவது எப்படி? (1/2)

image

அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டதால் பெரும்பாலான நேரத்தில் பலர் Youtube தளத்தில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை வைத்து பலரும் தங்களுக்கென சேனல் ஆரம்பித்து நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த சேனல்களை எப்படி தொடங்குவது என தெரிந்து கொள்வோம். உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருக்கும்பட்சத்தில், Youtube.com சென்று, ஜிமெயில் முகவரி, கடவுச்சொல் உள்ளிட்டு நுழையலாம்.

News June 17, 2024

4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

image

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சைபாசா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!