India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லிராணியை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். முதல்வர் கையில் காவல்துறை இருந்தும், இதுபோன்ற சம்பவங்கள் ஏன் தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காஷ்மீரின் ரியாஸி பகுதியில் கடந்த 9ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 9 யாத்ரீகர்கள் பலியாகினர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வரும் நிலையில், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இதையடுத்து என்ஐஏ புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
பாபர் அஸாம் பாகிஸ்தான் அணியில் இடம்பெற தகுதியற்றவர் என்று ஷேவாக் விமர்சித்துள்ளார். முதல் 6 ஓவர்களில் 50-60 ரன்கள் எடுக்க முடியாத போது பாபர் ஓப்பனிங் இறங்கி என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய அவர், கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டால், பாகிஸ்தான் டி20 அணியில் இடம்பெற தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் பாபர் அஸாம், 4 ஆட்டங்களில் 122 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் வரும் 21ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 2 நாள்களுக்கு நகரின் சில பகுதிகளில்
இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யலாம் என கணித்துள்ளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை
37-38° C இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
பெரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் அமர்ந்து செல்லும் வசதி மட்டுமே இருக்கிறது. இதனால், தொலை தூர நகரங்களுக்கு இடையே இந்த ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனை சரி செய்யும் வகையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை ஆகஸ்ட் 15 முதல் பரிசோதனை முறையில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சென்னை – டெல்லி போன்ற தொலை தூர நகரங்களை இணைக்க முடியும்.
மேற்குவங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இவ்விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர், மோடி அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என்றும் உறுதி தெரிவித்தார். மோடி அரசின் நிர்வாக அலட்சியமே கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்ததற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம் என காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மதிய நேரம் உணவருந்திவிட்டு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். இதன் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம் * இதய நலன் மேம்படும் * சர்க்கரை, தைராய்டு போன்ற ஹார்மோனல் பிரச்னை சீராகும் * செரிமான பிரச்சினை சரியாகும் * சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் *மன அழுத்தம் குறையும் *நினைவாற்றல் அதிகரிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம். அப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளிவந்தபடி இருந்தது. ஆனால், அதற்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதில் திமுக தலைமை கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இதனால், உதயநிதிக்கு இப்போதைக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படாது எனப் பேசப்படுகிறது.
திருப்பதி திருமலையில் நடிகர் அஜித் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. வேட்டி சட்டையுடன் அம்சமாக காட்சியளிக்கும் அவரது புகைப்படத்தினை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அஜித் தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.